ADDED : ஏப் 13, 2024 02:47 AM
கோயில்
சித்திரைத் திருவிழா ---2ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாசி வீதிகளில் தங்கச்சப்பரம், காலை 7:00 மணி, அம்மன், சுவாமி பூத, அன்ன வாகன உலா, இரவு 7:00 மணி.
சித்திரைத் திருவிழா - 2ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன் கோட்டை, சரஸ்வதி அலங்காரம், மாலை 6:00 மணி.
பங்குனி திருவிழா- - தெருப்பொங்கல்: சக்திமாரியம்மன் கோயில், மேலத்தெரு, மேலுார், மதியம் 12:00 மணி, முளைப்பாரி எடுத்தல், மாலை 6:00 மணி.
வசந்த நவராத்திரி விழா, லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு மதுரை, மாலை 6:00 மணி.
சஷ்டி பூஜை: செல்வ விநாயகர் கோயில், கஸ்டம்ஸ் காலனி, அய்யர்பங்களா, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
அஷ்டா வக்ர கீதை: நிகழ்த்துபவர் - மல்லி கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
ஸத்ஸங்கம், கூட்டு பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:30 முதல் 8:30 மணி வரை.
பொது
மதுரை மகளிர் மேம்பட்ட நலச்சங்கம் துவக்க விழா: 3, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை, தலைமை: பெரியபாண்டி, சிறப்பு விருந்தினர்: தேவகி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் நாகேந்திரன், மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம்: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
கண்காட்சி
காட்டன், பட்டு சேலைகள் சித்திரை விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: விவேகானந்தா சேலைகள், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

