ADDED : ஆக 19, 2025 01:11 AM
கோயில்
ஏகாதசி சிறப்பு பூஜை: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 7:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* ஏகாதசியை முன்னிட்டு ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* விவேக சூடாமணி விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்ய சத்வானந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆர்.சி.கல்யாண மஹால், ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், மதியம் 1:15 மணி, 58வது வார்டில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு: மேலப்பொன்னகரம் 2வது தெரு, கோமஸ்பாளையம், மதுரை, மதியம் 1:30 மணி.
திரிவேணி விழா - சிவானந்த ஜெயந்தியை முன்னிட்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொருளுடன் குறள் (அதிகாரம் 40, 41, 42, 43) ஒப்புவித்தல் போட்டி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 5:00 மணி.
புதிய அலுவலக கிளை திறப்பு விழா: ஆமினாம்மாள் காம்ப்ளக்ஸ், பாலாண்டி அம்பலம் நகர், ராஜகம்பீரம், ஒத்தக்கடை, மதுரை, முன்னிலை: சங்க மாவட்ட தலைவர் குருசாமி, திறந்து வைப்பவர்: மாநிலத் தலைவர் விஸ்வநாதன், குத்துவிளக்கு ஏற்றுபவர்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 7:45 மணி.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், தலைமை: மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
வீட்டுக் கடன் திருவிழா: எஸ்.பி.ஐ., அரசரடி கிளை, எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.
மருத்துவம்
மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பசுமலை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு
மதுரை வருவாய் மாவட்ட குடியரசு தின விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, 14 முதல் 19 வயது பள்ளி மாணவர்களுக்கான தடைகள் தாண்டுதல், ஜாவ்லின், வட்டு எறிதல் உள்ளிட்ட முதற்கட்ட போட்டிகள், ஏற்பாடு: பள்ளிக்கல்வித் துறை, காலை 7:30 மணி.
மாற்றுத்திறனாளிகளுக்காக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, துவக்க விழா சிறப்பு விருந்தினர்கள்: மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் தலைவர் ரத்தினவேலு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா, காலை 9:00 மணி, நிறைவு விழா சிறப்பு விருந்தினர்கள்: எஸ்.பி., அரவிந்த், தேவதாஸ் மருத்துவமனை துணைத் தலைவர் சதீஷ் தேவதாஸ், நிர்வாக இயக்குநர் ஹேமா, ஏற்பாடு: மதுரை மகளிர் வட்டம் 8, மாலை 4:30 மணி.
கண்காட்சி
சேலைகள், சுடிதார்கள், ஆடவர் ஆடைகள் விற்பனை, கண்காட்சி: சிவகாமி, ராஜம் பிளாசா, தல்லாகுளம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.