தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


UPDATED : ஜூலை 20, 2026 07:12 PM

ADDED : ஜூலை 20, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 07:12 PM ADDED : ஜூலை 20, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜூலை 21

கோயில் * ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் தங்கச் சப்பரத்தில் பவனி, காலை 9:00 மணி, கிளி வாகனத்தில் பவனி, இரவு 7:00 மணி.

* ஆடி பிரம்மோற்ஸவம் - கொடியேற்றம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், காலை 8:15 மணிக்கு மேல் 8:45 மணிக்குள், அன்ன வாகனத்தில் பெருமாள் எழுந்தருளல், மாலை 6:30 மணி.

* கும்பாபிஷேக மண்டல பூஜை: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், காலை 8:00 மணி.

* ஆடித்திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், ஊருணிக்கரை, அனுப்பானடி, மதுரை, மஞ்சள் நீராட்டு விழா, காலை 10:00 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.

* வளர்பிறை அஷ்டமி: சித்தி விநாயகர் கோயில், மேலப்பனங்காடி, மதுரை, விநாயகர், சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம், அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி.

பக்தி சொற்பொழிவு * அம்மனின் கிளி வாகனம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருப்புகழ் நெருப்பையும் எரிக்கும்: நிகழ்த்துபவர் - வெங்கடேசன், தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:00 மணி.

* பாகவதசப்தாகம்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி * வணிகவியல் மாணவர்களுக்கு உருவாகி வரும் வாய்ப்புகள் - கல்விசார் கற்றலையும் தொழில்துறை எதிர்பார்ப்புகளையும் இணைத்தல் குறித்து கருத்தரங்கு: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜா, சிறப்பு விருந்தினர்: பல்செக்யு புரோக்கிங் கம்பெனி மண்டல தலைவர் ரமேஷ் தேவதாஸ், தி எல்டன் மயோ, தி பிலிப் கோட்லர், தி பின்டெக் ஆகிய கிளப்கள் துவக்கம், ஏற்பாடு: வணிக நிர்வாகத் துறை, காலை 10:00 மணி.

* போதை விழிப்புணர்வு முகாம்: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, தலைமை: முதல்வர் ஞானசேகரன், காலை 10:30 மணி.

* எலிமென்ட்ரா கிளப் தொடக்க விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அருள் ஆண்டவர் கல்லுாரி வேதியியல் துறைத் தலைவர் சவிதா தேவி, ஏற்பாடு: வேதியியல் துறை முதுகலை ஆராய்ச்சி பிரிவு, காலை 11:15 மணி.

பொது * தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு தின நிகழ்ச்சி: மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல்நகர், மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், முன்னிலை: ராம்சந்திரா கண் மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஸ்ரீனிவாசன், ஓய்வு பெற்ற போலீஸ் துணைகமிஷனர் மணிவண்ணன், ஆடிட்டர் சேது மாதவா, சிறப்பு விருந்தினர்: எம்.எல்.ஏ., கார்த்திகேயன், ஏற்பாடு: பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

* மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், திருமங்கலம், பங்கேற்பு: மதுரை மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* மாதாந்திர கூட்டம்: எம்.எல்.டபிள்யூ.ஏ., மேல்நிலைப்பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஹெல்ப்லைன் தெரபி நிறுவனர் சக்திராஜ், ஏற்பாடு: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர்கள் சங்கம், மாலை 5:00 மணி.

விளையாட்டு * ராஜாமணி, கனகமணி அம்மாள் நினைவுக் கோப்பை மாநில அளவிலான ஹாக்கி போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப், அதிகாலை 6:30 மணி, மதியம் 2:30 மணி, மாலை 4:00 மணி.

* பள்ளிக் கல்வித்துறை சார்பில் குறுவட்ட அளவிலான கூடைப்பந்து, டெனிகாய்ட், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, காலை 7:00 மணி முதல்.

மருத்துவம் * நிறுவனர் டாக்டர் மனோரமா பிறந்த மாதத்தை முன்னிட்டு குழந்தையில்லா தம்பதிக்கான மருத்துவ முகாம்: சுமதி கருத்தரித்தல் மையம், சுமதி மருத்துவமனை, அண்ணாநகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

* உலக மூளை தினத்தை முன்னிட்டு சிறப்பு இலவச பரிசோதனை முகாம்: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, இலந்தைகுளம், காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை.

* முதுகு தண்டுவட மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் அஸ்வின் தீபக் ராஜன், மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us