sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை


ADDED : ஜூன் 12, 2025 02:13 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வைகாசி பெருந்திருவிழா 10ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளல், காலை 10:15 மணிக்கு மேல், அலங்கார திருமஞ்சனம், மாலை 4:00 மணி, எடுப்புச்சப்பரம், சப்தாவர்ணம், தேர் தடம் பார்த்தல், இரவு 7:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம் : கள்ளழகர் கோயில், அழகர் கோவில், சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு சுந்தரராஜ பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல், மாலை 5:00 மணி.

வைகாசி விழா : திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை,சிம்ம லக்னத்தில் பாலாபிஷேகம், காலை 10:30 முதல் 11:30 மணி வரை, சைத்யோபசாரம், மாலை 6:00 மணி, யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளல். இரவு 7:00 மணிக்கு மேல்.

வைகாசி விழா : பத்ரகாளி மாரியம்மன், திருமங்கலம், வெள்ளிச்சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம் வந்து மதுரை மேலப்பேட்டை உறவின் முறையார் மண்டகப்படி சேர்தல், காலை 8:00 மணி, யானை வாகனத்தில் மண்டகப்படியிலிருந்து அம்மன் நகர்வலம், இரவு 8:00 மணி.

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா : , மதுரை ஆதின மடம், தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை, மதுரை ஆதினம் மீனாட்சியம்மன் கோயிலுக்கு மங்கள இசையுடன் செல்லுதல், அதிகாலை 4:00 மணி, கோயில் கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜை, அதிகாலை 5:00 மணி, அடியவர் வழிபாடு, மதியம் 1:00 மணி, மங்கள இசை, மாலை 6:30 மணி.

திருஞானசம்பந்தர் குருபூஜை விழா : இம்மையில் நன்மை தருவார் கோயில், மதுரை, அபிஷேகம், திருமுறை பாராயணம், காலை 8:00 மணி, புறப்பாடு, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

மேலக்கோட்டை திருநாராயணபுர வைபவம் : நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமி, மதனகோபாலசுவாமி கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

அகண்டநாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 8:00 மணி, சொற்பொழிவு, மதியம் 12:30 மணி.

தியானமும் யோகமும்: நிகழ்த்துபவர் - பிரஜாபதி பிரம்மா குமாரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.

பொது

மதுரை கிழக்கு கோட்டத்தை சார்ந்த மின் நுகர்வோர் குறைதீர்கூட்டம்: உதவி செயற்பொறியாளர் அலுவலகம், மேலுார், தலைமை : மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 10:00 மணி முதல்.

பேராசிரியர் மோகன் பார்வையில் முல்லைப்பாட்டு - சொற்பொழிவு: மதுரை திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, தலைமை: பேராசிரியர் ராமசாமி, சிறப்புரை: கவுரவ விரிவுரையாளர் சிங்கராஜா, பேராசிரியர் நிர்மலா மோகன், மாலை 4:30 மணி.

மருத்துவ முகாம்

அக்குபஞ்சர் முகாம்: தமிழக மகா சவுராஷ்டிரா சபா, ராமகிருஷ்ணா காலனி, கைத்தறிநகர், நிலையூர், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, மீனாட்சிநகர் கிளை, வில்லாபுரம், மதுரை, காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை, லட்சுமிநகர் கிளை, சவுராஷ்டிராபுரம் பஸ் ஸ்டாப், வண்டியூர், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us