/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / நவ. 2 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / நவ. 2 க்குரியது
ADDED : நவ 02, 2025 04:15 AM
கோயில் பவித்ர உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மூலவர், உற்ஸவர்களுக்கு திருமஞ்சனம், சிறப்பு பூஜை, அலங்காரம், சந்திரசேகர சுவாமி -சன்னதி 2ம் பிரகாரம் வலம்வந்து சேத்தியாதல், காலை 8:00 மணி.
தைலக்காப்பு உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சகல பரிவாரங்களுடன் உற்ஸவ பெருமாள் பல்லக்கில் அழகர்மலை புறப்படுதல், காலை 6:45 முதல் 7:15 மணிக்குள், நுாபுர கங்கையில் தைலம் சாத்தப்பட்டு திருமஞ்சனம், விசேஷ அலங்காரம், சிறப்பு பூஜை, காலை 10:35 முதல் 11:30 மணிக்குள், இருப்பிடம் சேர்தல், மாலை 5:00 மணி.
தைலக்காப்பு உற்ஸவம்: ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானம், மீனாட்சிபுரம் 2வது தெரு, முனிச்சாலை, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிர பிராமண தர்ம பரிபாலன சபை, மாலை 6:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
திருப்பலி: இயேசுவின் திரு இருதய சர்ச், ரயில்வே காலனி, மதுரை, காலை 7:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு முத்துச்சாமி - லோகாம்பாள் நினைவு அறக்கட்டளை சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஆறுமுகம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஏகாதசியை முன்னிட்டு ஹரே ராமா மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி, அபிஷேகம், காலை 11:00 மணி, சத்சங்கம், மதியம் 1:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி, சுவாமி சமானந்தரின் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் விளக்கவுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி திருக்குறள் திருப்பணிகள் - தொடர் வகுப்புகள்: மணியம்மை பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்றுநர்: செந்தாமரை கலை அறிவியல் கல்லுாரி உதவிப் பேராசிரியர் ஜன்னத், ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித் துறை, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
பொது ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விளக்க வகுப்புகள்: விவேகானந்தர் நுாலகம், வடக்குத் தெரு, அனுப்பானடி, மதுரை, விளக்கமளிப்பவர்: ஓய்வு உதவிப்பேராசிரியர் மூர்த்தி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
ஐங்குறுநுாறு மருதத்திணைப் பாடல்கள் - நுால் வெளியீட்டு விழா: திருவள்ளுவர் மன்றம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, தலைமை: மன்றத் தலைவர் சுப்பிரமணியன், வெளியிடுபவர்: யாதவர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராமசாமி, ஏற்புரை: பாத்திமா கல்லுாரி ஓய்வு பெற்ற இணைபேராசிரியர் சரஸ்வதி அய்யப்பன், மாலை 4:30 மணி.
சிறப்புக் கூடுகை: இமானுவேல் சி.எஸ்.ஐ., சர்ச் சமுதாயக் கூடம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், மதுரை, தலைமை: திருவள்ளுவர், பெருங்கவிக்கோவின் தமிழ் ஆளுமை குறித்து சிறப்புரை: கவிஞர்கள் ஞான ஆனந்தராஜ், ரவி, குறளடியான், பேராசிரியர் அராபியா, ஏற்பாடு: பன்னாட்டு தமிழுறவு மன்றம், மாலை 5:00 மணி.
புத்தகம் வெளியீட்டு விழா: ஆத்மநாதபுரம், அழகர்மலை கிழக்கு அடிவாரம், மதுரை, தலைமை: நேதாஜி சுவாமிநாதன், வெளியிடுபவர்: காந்தி மியூசியம் யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் பிரிவு நிர்வாகி தேவதாஸ் காந்தி, சிறப்பு விருந்தினர்: மீனாட்சி அம்மன் கோயில் திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி தலைவி விசாலாட்சி, மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமச்சந்திரன், காலை 9:00 மணி.
பந்தல்குடி கால்வாயில் இருந்து வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து ஆய்வுப்பணி: சுத்திகரிப்பு நிலையம், மீனாட்சி கல்லுாரி அருகே, மதுரை, ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், காலை 8:00 மணி.
எம்.எல்.ஏ., நிதியில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை: ஜானகிநகர் பள்ளம், சோலைஅழகுபுரம், மதுரை, தலைமை: முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ, காலை 10:00 மணி.
கண்காட்சி நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை.

