ADDED : நவ 08, 2025 01:53 AM
கோயில்
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
சங்கடஹர சதுர்த்தி
முக்குறுணி விநாயகர் சன்னதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 4:30 மணி.
காட்டுப் பிள்ளையார் கோயில், நரிமேடு, மதுரை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி.
சக்தி விநாயகர் கோயில், ரயில்வே கோட்ட அலுவலக வளாகம், மதுரை, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி.
செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, மாலை 4:30 மணி.
வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மதுரை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்' விளக்கவுரை, காலை 9:15 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
ஆன்மிக சொற்பொழிவு, கூட்டுப் பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
'பிக்சல்ஸ் டு பேஜஸ்' - கேஜட்ஸை தவிர்த்து புத்தக வாசிப்பு நிகழ்ச்சி: லட்சுமி பள்ளி, வீரபஞ்சான், மதுரை, தலைமை: முதல்வர் சுபாஷினி, காலை 7:00 மணி.
பொது
மகளிர் மாநாடு: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் மரியலுாயிஸ், சிறப்பு விருந்தினர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், ஏற்பாடு: மதுரைக் கோட்ட எல்.ஐ.சி., முகவர்கள் சங்கம், காலை 9:30 மணி.
தமிழ்ப் பாடல்கள் - கர்நாடக இசைக் கச்சேரி: ஓட்டல் பார்ச்சூன் பாண்டியன், மதுரை, சிறப்பு விருந்தினர்: வணிக வரித்துறை மாநில வரிகள் கூடுதல் கமிஷனர் தேவேந்திரபூபதி, பாட்டு -- பிருந்தா, வயலின் - ஸ்ரீகாந்த் மோகன், மிருதங்கம் - அக்ஷ்யராம், ஏற்பாடு: கடவு, ராகப்ரியா, மாலை 6:00 மணி.
தேசிய தலைவர் - திரைப்படக் குழுவிற்கு பாராட்டு: கோபுரம் சினிமாஸ், செல்லுார், மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: தமிழக தடயவியல் துறை முன்னாள் இயக்குநர் விஜயகுமார், தென்னக மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் ஐயப்பாகார்த்திக், காலை 10:30 மணி, திரைப்படக் காட்சி: காலை 11:30 மணி.
பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்: குடிமைப் பொருள் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்கள், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கண்காட்சி
நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை.
காந்தி சில்ப் பஜார் - அகில இந்திய கைவினைப் பொருட்களின் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: பெட்கிராட் நிறுவனம், கைவினைப் பொருட்களுக்கான மேம்பாட்டு இயக்ககம், காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

