/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இன்றைய நிகழ்ச்சி / அக்.26 க்குரியது
/
இன்றைய நிகழ்ச்சி / அக்.26 க்குரியது
ADDED : அக் 26, 2025 04:44 AM
கோயில் கும்பாபிஷேகம்: உலக்குடி சோணைச்சாமி கோயில், தேனுார், திருமுறை பாராயணம், காலை 8:15 மணி, இரண்டாம் கால யாகசாலை, காலை 8:30 மணி, அன்னதானம், காலை 11:00 மணி, கும்பாபிஷேகம், தீபாராதனை, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணிக்குள்.
மாதாந்திர உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
கந்த சஷ்டி விழா மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கூடல் குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 7:00 மணி, கோலாட்ட உற்ஸவம்: மாலை 6:00 மணி.
சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி.
முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், யாககால பூஜை, காலை 8:30 மணி, அபிஷேகம், தீபாராதனை, சப்பர வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, திருத்தணிகை முருகன் சந்தன அலங்காரம், மாலை 6:00 மணி.
மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மயில்வேல் முருகன் அலங்காரம், பூர்ணாஹூதி, யாக பூஜைகள், பிரசாதம் வழங்குதல், காலை 9:30 மணி முதல்.
ஆஞ்சநேயர் கோயில், செந்தில்முருகன் சன்னதி, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மதுரை, ஹோமம், யாகசாலை பூஜைகள், காலை 7:00 மணி, 108 கும்பசங்காபிஷேகம், வெள்ளை மலர் அலங்காரம், காலை 9:00 மணி, ஹோமம், வேல் வாங்கும் காட்சி, மாலை 6:15 மணி.
பக்தி சொற்பொழிவு ஆரோக்கியத்தின் ரகசியம் : நிகழ்த்துபவர் - பிரேமகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
குமாரஸ்த்வம், சஷ்டி கவசங்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், சுப்ரமணியர் புஜங்கம், வேல்மாறல்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, தீபாராதனை, மாலை 6:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை : நிகழ்த்துபவர் -- - பிரசிதானந்தா சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், காலை 7:00 மணி முதல்.
அன்னை சாரதாதேவி பற்றிய சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி தயாசாகரானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
ஹரே ராமா மகாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி அரசின் திருக்குறள் திருப்பணிகள்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, பயிற்சி அளிப்பவர்: வலையங்குளம் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பூங்கொடி, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணி வரை.
பொது தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி நிறைவுவிழா: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறப்பு விருந்தினர்: மாநில சட்டக் கல்வி இயக்குநர் விஜயலட்சுமி, ஒருங்கிணைப்பு: கல்லுாரி முதல்வர் குமரன், காலை 10:30 மணி.
மதுரை நகர் போலீசார் சார்பில் காவலர் வீரவணக்க நாள் மாரத்தான் போட்டி: ரிசர்வ் லைன் மைதானம், மதுரை, துவங்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 6:00 மணி.
'அடியேற்கு முன் நின்று அருள்' அருள்ஞானசபை கூட்டம்: நிகழ்த்துபவர் - பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம், தியாகராஜர் கல்லுாரி, மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.
27 ஆம் ஆண்டு கீதை ஒப்புவித்தல் போட்டிகள்: சேதுபதி மேல்நிலைப் பள்ளி, மதுரை, துவங்கி வைப்பவர்: சிமா தொழில் குழுமம் பானுமதி பாலசுப்பிரமணியன், ஆசியுரை: சுவாமி சிவாயோகானந்தா, முன்னிலை: தலைவர் திருமாலையப்பன், காலை 9:00 மணி முதல்.
மேடைப்பேச்சு - ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம்: உலக தமிழ்ச் சங்கம், மதுரை, 'இலக்கியத் தேடலும், புகழும்' பற்றிய சிறப்புரை: பாத்திமா கல்லுாரி முன்னாள் முதல்வர் விசாலாட்சி, காலை 9:00 மணி, 'சுயக்கட்டுப்பாடும் பேச்சாளரும்' பற்றிய சிறப்புரை ராணுவ மேஜர் அசோக்குமார், காலை 11:00 மணி, 'பன்னாட்டு நிறுவனங்களில் பேச்சுவாய்ப்பு' பற்றிய சிறப்புரை இனோவேட்டிவ் குழும இயக்குநர் வெங்கடேஷ் நாராயணசாமி, மதியம் 1:30 மணி, ஏற்பாடு: உலக தமிழ்ச் சங்கம், கலை நிகழ்ச்சிகள், மாலை 3:30 மணி.
பிராமண சுயம்வரம்: சத்சங்கம் ஹால், எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 9:00 மணி.
இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், 'ஆரோக்கியமான வாழ்விற்கு தனிமனிதனின் பங்கு தலைப்பில்' பேசுபவர்: தர்மபுரி மருத்துவக் கல்லுாரி உதவிப்பேராசிரியர் டாக்டர் கவுரி, 'இயற்கை வாழ்வியலும் உண்ணா நோன்பும்' தலைப்பில் பேசுபவர்: யோகா ஆசிரியர் பிரபு, காலை 10:00 மணி.
'இருமொழி இருக்க மும்மொழி எதற்கு' சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரை கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
மாதாந்திர கூட்டம்: முத்துத்தேவர் காலனி, விராட்டிபத்து, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், காலை 10:00 மணி.
மருத்துவம் இலவச பொது நல மருத்துவ முகாம்: ஆர்.சி. தொடக்க பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை, ஏற்பாடு: வளனார் சமூகநல இயக்கம், காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
இலவச கண் பரிசோதனை முகாம்: ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, சேக்கிப்பட்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்,அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மின்டன் ரேங்கிங் போட்டி: நாக்அவுட் சுற்று: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.

