ADDED : ஜன 12, 2026 06:32 AM
கோயில் அம்மன் வீதியுலா: செல்லத்தம்மாள் கோயில், சிம்மக்கல், மதுரை, வக்கீல் புதுத்தெரு, யானைக்கல், வடக்குமாசி வீதி வழியாக அம்மன் சிம்மாசனம் சப்பரத்தில் வீதியுலா, காலை 9:00 மணி, இரவு 8:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
சுவாதி நட்சத்திரத்திற்கான மார்கழி மாத விசேஷ பூஜை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, பைபாஸ் ரோடு கிளை, மதுரை, அதிகாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு தியானம், சத்ஸங்கம்: நிகழ்த்துபவர் - வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், 4, மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: சித்தர் அகத்தியனார் சித்த யோக தியான மையம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, விவேகானந்தர் உருவச்சிலைக்கு சங்கு முழக்கத்துடன் ஆரத்தி, காலை 6:30 மணி, சிவபுராணம் பாராயணம், இரவு 7:00 மணி.
லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, கலை 7:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம்: பிராமண இளைஞர்கள் சங்கம், 21, ஐயப்பன் கோயில் எதிரில், சம்பந்தமூர்த்தி தெரு, மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி,
மார்கழி மாத சத்ஸங்கம், திருப்பள்ளி எழுச்சி, கீதை பாராயணம், பஜனை, புஷ்பாஞ்சலி: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி முதல்.
72 வது ஆண்டு பாவை விழா: திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதி வலம் வருதல், காலை 6:00 மணி, பாவைப் பாடல், கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.
திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன் சுவாமிகள், கூடலழகர் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுரை, காலை 7:30 மணி.
திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - ஜகந்நாத ராமானுஜ தாசர், வீர ஆஞ்சநேயர் கோயில், அனுப்பானடி, மதுரை, காலை 6:30 மணி, மாலை 6:30 மணி.
திருப்பாவை உபன்யாசம்: நிகழ்த்துபவர் - சுஜாதா, பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, மாலை 6:00 மணி.
திருப்பாவை: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
அகண்ட மஹாமந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை.
பொது ம.தி.மு.க., நடத்தும் சமத்துவ நடைபயண நிறைவு விழா பொதுக்கூட்டம்: ஓபுளா படித்துறை, மதுரை, முன்னிலை: தலைவர் வைகோ, துரை வைகோ எம்.பி., அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தலைமை: எம்.எல்.ஏ., பூமிநாதன், பங்கேற்பு: எம்.எல்.ஏ., தளபதி, மாவட்ட செயலாளர் மணிமாறன், மாலை 6:00 மணி.
*மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கான தேர்தல் அறிக்கை தயார் செய்ய கோரிக்கை பெறும் கூட்டம்: சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், சி.வி.சண்முகம், செல்லுார் ராஜூ உட்பட பலர், ஏற்பாடு: மதுரை அ.தி.மு.க., காலை 10:00 மணி.
காலமுறை தொகுப்பூதியம் பெறுதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் விசாலாட்சி, மதியம் 2:00 மணி.
ஸ்டார்ட் அப் வாரம் 2026 கருத்தரங்கு: மெட்ரோபோல் ஓட்டல், மாவட்ட நீதிமன்றம் எதிரில், மதுரை, மேனுபாக்சரிங் ஸ்டார்ட் அப் கம்பெனிகள், ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் சிறப்புரை: ஸ்டார்ட் அப், ஏற்றுமதி பயிற்சியாளர் சேதுராமன் சாத்தப்பன், முன்னிலை: தலைவர் ராமலிங்கம், ஏற்பாடு: இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிகளின் மதுரை சேப்டர் ஸ்டார்ட் அப் இந்தியா, காலை 10:00 மணி.
மாமதுரையர் இயக்கம் சார்பில் பொங்கல் விழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: இயக்குநர் சேரன், முன்னிலை: மாமதுரையர் இயக்க நிறுவனர் திருமுருகன், காலை 9:30 மணி.
74 வது ஆண்டு கொண்டாட்டம், இசை, கலை விழா: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, இசை நிகழ்ச்சி: பாட்டு - விக்னேஷ் ஈஸ்வர், வயலின் - சாய் ரக் ஷித், மிருதங்கம் - சுமேஷ் நாராயணன், கஞ்சிரா - சுனில் குமார், ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:00 மணி.
இரண்டாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா: அல்அமீன் மேல்நிலைப் பள்ளி, புதுார், தலைமை: தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் அலாவுதீன், ஏற்பாடு: இந்திய மாணவர் சங்கம், காலை 10:00 மணி.
பாப்பான் ஓடை, ராமன்குளம், தின்னாநேரி கிராமங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சாலை மறியல்: சின்ன உடைப்பு - மதுரை மெயின் ரோடு, ஏற்பாடு: தலித் விடுதலை இயக்கம், காலை 11:00 மணி.
தலைக்கவசம் அணிவது தொடர்பாக போலீசாரின் வாகன விழிப்புணர்வு பேரணி: தல்லாகுளம் - தமுக்கம் சந்திப்பு, மதுரை, தொடங்கி வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 9:30 மணி.
பள்ளி, கல்லுாரி தைப்பொங்கல் விழா: ராஜாஜி நடுநிலைப்பள்ளி, மீனாம்பாள்புரம், மதுரை, மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், காலை 10:00 மணி முதல்.
சமத்துவ பொங்கல் திருவிழா: சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரி, விளாச்சேரி மெயின்ரோடு, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், முன்னிலை: முதல்வர்: கிருஷ்ணாஸ்ரீ, காலை 10:00 மணி முதல்.
தேசிய இளைஞர்கள் தின விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, பசுமலை, தலைமை: தாளாளர் குமரேஷ், இந்திய இளைஞர்களுக்கான அடையாளம் விவேகானந்தர் சிறப்புரை: ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் பிரபாகரன், முன்னிலை: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: கல்லுாரி நிர்வாகம், விவேகானந்தா கேந்திரா மதுரைக்கிளை, காலை 10:00 மணி.
மார்கழி பாவை விழா: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாண்டியராஜா, திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளி தேவார ஆசிரியர் சிவபிரகாஷ் நடத்தும் இசைக்கச்சேரி, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், மதியம் 12:00 மணி.
'வாழ்வெனும் பெருங்கனா' தேசிய இளைஞர் தின சிறப்பு சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, சிறப்பு விருந்தினர்: கவிஞர் பாலபாரதி, ஏற்பாடு: தமிழ்த்துறை, காலை 10:30 மணி, கல்லுாரி கலாட்டா நிகழ்ச்சி: ஏற்பாடு: வரலாற்றுத்துறை, காலை 11:00 மணி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு: சிறப்பு விருந்தினர்கள்: மதுரை தெற்கு மண்டல போக்குவரத்து அதிகாரி கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம், ஏற்பாடு: கல்லுாரியின் சாலைப் பாதுகாப்பு மன்றம், காலை 11:00 மணி.
பாலின சமத்துவ பொங்கல்: மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர்கோயில் ரோடு, மதுரை, தலைமை: செயலர் தர்மசிங், முன்னிலை: முதல்வர் ஜெயக்குமார், ஏற்பாடு: கல்லுாரி மாணவர் மன்றம், திருநங்கையர், திருநம்பிகள் ஆய்வு மற்றும் ஆவண மையம், காலை 9:30 மணி.
மருத்துவம் இலவச கண் பரிசோதனை: வாசன் கண் மருத்துவமனை, வடக்குவெளி வீதி, சேதுபதி பள்ளி எதிரில், சிம்மக்கல், மதுரை, ஆலோசனை வழங்குபவர்கள்: டாக்டர்கள் கமலபாபு, பிரேம்குமார், சுரேந்திர பால், சவுந்தர்யா ராஹினி, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.
கண்காட்சி பிரில்லியன்ஸ் வைர ஜூவல்லரி ஷோ: ஜோயாலுக்காஸ் ஜூவல்லரி, மேலவெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
கைத்தறி, நாட்டு ஆடைகளுக்கான கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 8:00 முதல் இரவு 9:00 மணி வரை.

