ADDED : மே 15, 2025 02:17 AM
கோயில்
மதுரை சித்திரைத் திருவிழா -- பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்துடன் எழுந்தருளுதல்: ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம், மதுரை, அதிகாலை 2:30 மணி முதல், மாரியம்மன் கோயில் அவுட் போஸ்ட், காலை 6:00 மணி, அம்பலகாரர் மண்டபம், காலை 7:00 மணி, மூன்று மாவடி, இரவு 7:00 மணி, மறவர் மண்டபம், இரவு 10:00 மணி, திருமஞ்சனமாகி அழகர் மலைக்கு திரும்புதல், நாளை அதிகாலை 1:00 மணி.
கும்பாபிஷேகம்: வெங்கடாஜலபதி பெருமாள் கோயில், சிந்துபட்டி, பல்லக்கில் வீதியுலா, காலை 7:00 மணி, கருட வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி.
அன்னை பாத்திமா சர்ச் 44ம் ஆண்டு விழா: பாஸ்டின் நகர், பாத்திமா நகர், மதுரை, திருப்பலி நடத்துபவர் - பாதிரியார் வின்சென்ட் ராஜா, மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ஸ்ரீமத் பகவத் கீதை சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
பொது
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுத்தல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தலைமை: நகர் செயலாளர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., மாலை 5:00 மணி.
கோடி லிங்க தரிசனம், ராஜயோக பட விளக்க கண்காட்சி: அழகர் நகர் பஸ் ஸ்டாப், புதுார், மதுரை, ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா, காலை 7:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
இசை நிகழ்ச்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, குரலிசை - பிரணதி கணபுரம், வயலின் - சச்சிதானந்தன், மிருதங்கம் - தியாகராஜன், ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.
கோடை கால யோகா பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், பயிற்சியாளர்கள்: லோக பிரியா, பழனிகுமார், கிருஷ்ணன், ஏற்பாடு: மியூசிய செயலாளர் நந்தாராவ், காலை 10:30 முதல் 11:30 மணி வரை, மாலை 4:30 முதல் 5:30 மணி வரை.
'வானியலோடு விளையாடு' - குழந்தைகளுக்கான கோடைக் கொண்டாட்டம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, காலை 11:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
விளையாட்டு
கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.
கண்காட்சி
அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
ராஜஸ்தான் பானிபட் மெத்தை விரிப்புகள், குர்தீஸ், சாரீஸ் கோடை கால விற்பனை: விஜய் மஹால், 80 அடி ரோடு, கே.கே.நகர், மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:30 மணி வரை.