sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 3 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 3 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 3 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /மே 3 க்குரியது


ADDED : மே 03, 2025 05:16 AM

Google News

ADDED : மே 03, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

சித்திரை திருவிழா -5ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் மாசி வீதிகளில் வலம் வந்து நவநீத கிருஷ்ணன் தேவஸ்தான மண்டபத்தில் எழுந்தருளல், காலை 9:00 மணி, அம்மனும், சுவாமியும், தங்கக் குதிரை வாகனத்தில் மாசி வீதிகள் உலா, இரவு 7:00 மணி, கோயிலில் வேடர் பறிலீலை நிகழ்ச்சி, இரவு 9:00 மணி.

கும்பாபிஷேகம்: குங்கும காளியம்மன் கோயில், தாமஸ் மெயின் வீதி, பெத்தானியபுரம், மதுரை, இரண்டாம் கால பூஜை, ஹோமம், தீபாராதனை, காலை 8:00 மணி, மூன்றாம் கால பூஜை, வேதபாராயணம், ஹோமம், மாலை 5:30 மணி.

சித்திரை திருவிழா 5ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றி ஊர்வலம், மாலை 6:00 மணி.

பூக்குழி விழா 6ம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், சோழவந்தான், பீமன் மேடம், கீசகன் வதம், காலை 8:00 மணி, அன்னதானம் மதியம்12:00 மணி, மகாபாரதம் தொடர் சொற்பொழிவு, மாலை 6:00 மணி.

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தாயுமானவர்: நிகழ்த்துபவர் - - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி.

நாராயணீயம்: நிகழ்த்துபவர் -- சுப்பராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா: வேலம்மாள் பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் நம்பெருமாள்சாமி, பங்கேற்பு: தாளாளர் வேல்மோகன், வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் வசந்தன், காலை 10:00 மணி.

பட்டமளிப்பு விழா: வைகை பொறியியல் கல்லுாரி, தெற்குத்தெரு, மதுரை, தலைமை: துணைத் தலைவர் சிங்காரவேலன், சிறப்பு விருந்தினர்கள்: விஞ்ஞானி சிவசுப்ரமணியன், சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதல்வர் சந்திரன், காலை 10:00 மணி.

கல்லுாரி தின விழா: எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்விக் குழு தலைவர் ரவி, கல்லுாரி தலைவர் பத்மபிரியா, தாளாளர் ஹரிணி, சிறப்பு விருந்தினர்: அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜ், காலை 10:00 மணி, விளையாட்டு விழா, பளு துாக்கும் வீரர் சம்சுதீன் கபீர், முதல்வர் துரைராஜ், மதியம் 3:00 மணி.

பட்டமளிப்பு விழா, வைகை பொறியியல் கல்லூரி, தெற்கு தெரு, பட்டம் வழங்குபவர்: இஸ்ரோ மூத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், காலை 10 :00 மணி.பொது

கோடைகால விளையாட்டுகள், கல்வியிடைப் பயிற்சி: அரசு மியூசியம், மதுரை, காலை 10:00 மணி.

கோடைகால இலவச பயிற்சி - ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை, 14, சி.எம்.ஆர்., ரோடு,முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: லே கிரேஸ் ஹால், திருப்பாலை, மதுரை, ஏற்பாடு: சட்டக் கல்லுாரி மாணவர்கள், காலை 11:00 மணி.

குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் -- கார்ட்டூன் பயிற்சி பட்டறை: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சியளிப்பவர் -- நந்தகுமார், காலை 11:00 மணி.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

கண்காட்சி

உணவு தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, பில்ட் எக்ஸ்போ: ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியம், மதுரை, ஏற்பாடு:மடீட்சியா, காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

கல்விக் கண்காட்சி, உயர்கல்வி வழிகாட்டல் முகாம்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.

ஹஸ்தகலா கைவினைப் பொருட்கள், துணிகள், நகைகள் விற்பனை, கண்காட்சி: ஜே.சி. ரெசிடென்சி, மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

கைவினைப்பொருட்கள் விற்பனை,காண்காட்சி: வி.எஸ்., செல்லம் நுாற்றாண்டு ஹால், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us