ADDED : மே 04, 2025 04:56 AM
கோயில்
சித்திரை திருவிழா -6ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் வீதி உலா, கோயில் சிவகங்ககை ராஜா மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:30 மணி, சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாசி வீதி உலா, இரவு 7:30 மணி.
கும்பாபிஷேகம்: குங்கும காளி அம்மன் கோயில், தாமஸ் மெயின் வீதி, பெத்தானியபுரம், மதுரை, நான்காம் கால பூஜை, ஹோமம், காலை 6:00 மணி, தீபாராதனை, ஆலயம் வலம் வருதல், காலை 9:00 மணி, விக்கிர கும்பாபிஷேகம், அலங்காரம், காலை 10:30 மணி முதல் 11:30 மணிக்குள், அன்னதானம், மதியம் 12:00 மணி, விளக்கு பூஜை, மாலை 6:00 மணி.
உழவாரப்பணி: கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், அவனியாபுரம், மதுரை, வீரராகவப் பெருமாள் கோயில், வண்டியூர், முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
சொர்ண பைரவி, பைரவருக்கு அபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்பு வீதி, பெத்தானியாபுரம், மதுரை, மாலை 5:00 மணி, அஷ்டமி பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி.
சித்திரை திருவிழா 6ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தை சுற்றி ஊர்வலம், மாலை 6:00 மணி.
பூக்குழி விழா 7ம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், சோழவந்தான், தபசு இடத்தில் புண்ணிய ஹோமம், காலை 6:00 மணி, தபசு மரம் நடுதல் 8:00 மணி, சொற்பொழிவு,மாலை 6:00 மணி, அம்மன் புறப்பாடு, இரவு 8:00 மணி.
ராதா கல்யாண மஹோத்சவம்: கோதண்ட ராமசுவாமி கோயில், பழங்காநத்தம் அக்ரஹாரம், மதுரை, பங்கேற்பு: பிரம்ம ஸ்ரீ ராஜகோபாலதாஸ் பாகவதர், குழு, உஞ்சவ்ருத்தி, காலை 7:30 மணி, திவ்ய நாமம், காலை 8:30 மணி, கல்யாண மஹோத்சவம், காலை 11:00 மணி, தீபாராதனை, பிரசாதம், மதியம் 12:45 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவ சபை, விசுவாசபுரி, மதுரை, பேசுபவர் - தேவமாணிக்கம், காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
செங்கதிர் வேலோன்: நிகழ்த்துபவர் - - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
சத்சங்கம், பஜனை, கீதை பாராயணம், திருக்குறள்: நிகழ்த்துபவர் -- கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை: சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.
லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், நிகழ்த்துபவர் -- சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்த ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள், நிகழ்த்துபவர் - - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
பொது
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம்: சந்திரகுழந்தை மகால், தெப்பக்குளம், மதுரை, தலைமை: அவைத் தலைவர் அண்ணாதுரை, பங்கேற்பு: பொருளாளர் குமார், துணைச்செயலாளர் ராஜா, சிறப்பு விருந்தினர்: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, ஏற்பாடு: நகர் அ.தி.மு.க., மாலை 6:00 மணி.
கோடைகால இலவச பயிற்சி ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை, 14, சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: கோவிந்த சேவா ஸமாஜம், 25, மகால் 6ம் தெரு, மதுரை, தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர் மெயின் ரோடு, வில்லாபுரம், மதுரை மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறி நகர், மதுரை, காலை 10:00 மணி.
அலுவலகம், முத்தாலம்மன் மகளிர் மன்றம், கலைவாணி நுாலகம் திறப்பு விழா: 32, வைகை வடகரை ரோடு, காந்தி நகர், மதுரை, தலைமை: தலைவர் பொன்னம்பலம், சிறப்பு விருந்தினர்: கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம், ஏற்பாடு: மதுரை ஆயிரவைசிய மஞ்சப்புத்துார் மக்கள் நலச்சங்கம், காலை 10:00 மணி.
நகைச்சுவை மன்றக்கூட்டம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, தலைமை: தலைவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏற்பாடு: நகைச்சுவை மன்றம், காலை 10:00 மணி.
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் -- கீற்றுக்கலை பயிற்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சியளிப்பவர்: திலகராஜன், காலை 11:00 மணி.
கண்காட்சி
உணவு தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, பில்ட் எக்ஸ்போ: ஐடா ஸ்கட்டர் ஆடிட்டோரியம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
ஹஸ்தகலா கைவினைப் பொருட்கள், துணிகள், நகைகள் விற்பனை, கண்காட்சி: ஜே.சி. ரெசிடென்சி, மதுரை, காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.
அரசு சித்திரை பொருட்காட்சி துவக்கவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், மூர்த்தி, தியாகராஜன், காலை 9:30 மணி.
கைவினைப்பொருட்களின் விற்பனை கண்காட்சி: வி.எஸ்., செல்லம் நுாற்றாண்டு ஹால், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.