ADDED : டிச 09, 2024 05:32 AM
கார்த்திகை 4ம் சோமவாரம்
1008 சங்காபிஷேகம்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மாலை 4:00 மணி, அபிஷேகம், ஆராதனை, சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி.
108 சங்காபிஷேகம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, மாலை 5:30 மணி.
சங்காபிஷேகம்: வரசித்தி விநாயகர் கோயில், அசோக் நகர், கூடல் நகர், மதுரை, மாலை 6:00 மணி.
கோயில்
கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, தலைமை: ஜனாபாய், முன்னிலை: கிரிஜா, காலை 7:30 மணி.
சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
தேசிய தர மதிப்பீட்டுக்குழு வருகை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: செயலாளர் சுந்தர், காலை 9:30 மணி.
ஏ.ஐ., தொழில்நுட்பம் குறித்த ஐந்து நாள் கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மஹாராஷ்டிரா அனேகன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் டானாஜி விட்டல் சவன், ஏற்பாடு: கல்லுாரியின் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம், மாலை 6:00 மணி.
பொது
26வது மதுரை சர்வதேச ஆவணப்படம், குறும்பட விழா: அருள் ஆனந்தர் கல்லுாரி, கருமாத்துார், காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை, ஓய்.எம்.சி.ஏ., அரங்கு, மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: திருவள்ளுவர் சிலை அருகே, கலெக்டர் அலுவலகம் ரோடு, மதுரை, ஏற்பாடு: டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, காலை 10:00 மணி.
மருத்துவம்
நுரையீரல் சிறப்பு முகாம்: வளர்நகர் பின்புறம், 4வழிச் சாலை, இலந்தைகுளம், மதுரை, ஏற்பாடு: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
கண்காட்சி.
விளக்குகள் கண்காட்சி, விற்பனை: பூம்புகார் விற்பனை நிலையம், சிட்கோ, புதுார், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
காந்தி சில்ப் பஜார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித் துறை அமைச்சகம், பெட்கிராட் நிறுவனம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.