sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை


ADDED : பிப் 05, 2025 05:22 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

தெப்பத் திருவிழா - 6ம்நாள்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மனும் சுவாமியும் தங்கச்சப்பரத்தில் வீதி உலா, காலை 9:00 மணி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சுவாமி தங்க ரிஷப வாகனத்திலும் வீதி உலா, சைவ சமய வரலாற்று லீலை, இரவு 7:00 மணி.

தெப்பத் திருவிழா 8ம்நாள்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், நடராஜர், சிவகாமி அம்மன் விடையாத்தி சப்பரத்தில் புறப்பாடு, காலை 9:00 மணி, சுப்பிரமணியர், தெய்வானையுடன் பச்சைக் குதிரை வாகனத்தில் புறப்பாடு, இரவு 7:00 மணி.

தைப்பூசத் திருவிழா - 4ம்நாள்: முருகன் கோயில், அழகர்கோவில், அபிஷேக தீபாராதனை, காலை 11:00 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, மாலை 6:00 மணி.

வளர்பிறை அஷ்டமி, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு யாகம், வரசித்தி விநாயகர் கோயில், கீழப்பனங்காடி, மாலை 6:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் -- விசயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

மருந்து -- திருக்குறள்: நிகழ்த்துபவர் -- இலங்கை ஜெயராஜ், ராஜா முத்தையா மன்றம், மதுரை, ஏற்பாடு: தமிழ் இசைச் சங்கம், மாலை 6:30 மணி.

இலக்கியங்களில் மனிதநேயம்: நிகழ்த்துபவர் -- சண்முகத்திருக்குமரன், திருவள்ளுவர் மன்றம், 9, பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.

அஷ்டா வக்கிர கீதை: நிகழ்த்துபவர் -- ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, இரவு 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

பால ராமயாணம் --- சிறப்பு விரிவுரை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பேசுபவர்: மதுரை காமராஜ் பல்கலை சமஸ்கிருத உதவி பேராசிரியர் சுதர்சன், ஏற்பாடு: சமஸ்கிருத துறை, காலை 10:00 மணி.

'எக்ஸ்புலோரிய 2025' இந்திய பாரம்பரிய கலைகளுக்கான மறுமலர்ச்சி நிகழ்ச்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் செலினா சகாயமேரி, ஏற்பாடு: கல்லுாரி ஆய்வு, முன்னேற்ற மையம், காலை 9:00 மணி.

ஜி.எஸ்.டி., யில் ஏ.ஐ., மூலம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இன்றைய சவால்கள் குறித்த கருத்தரங்கு: சிவகாசி நாடார் பெண்கள் கல்லுாரி, பூவந்தி, கருத்துரையாளர்கள்: டாடா கன்சல்டன்சி மேலாளர் சண்முகபிரியா, வணிகவியல் துறைத் தலைவர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி செல்வநாதன், பங்கேற்பு: செயலாளர் சிவராம், முதல்வர் விசுமதி, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:15 மணி, இலவச கண் சிகிச்சை முகாம், காலை 10:00 மணி, பெண்களின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு, சிறப்பு விருந்தினர்: டாக்டர் ரோஸ்லின் சுல்தானா, ஏற்பாடு: கல்லுாரி என்.என்.எஸ்., குழு, மாலை 4:00 மணி.

கர்ப்பபை வாய் புற்றுநோய் -விழிப்புணர்வு பாதுகாப்பு நிகழ்ச்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: டாக்டர் ஆனந்திபாபு, ஏற்பாடு: பெண்கள் மேம்பாட்டு அமைப்பு, காலை 10:00 மணி.

136ம் ஆண்டு விழா, விளையாட்டு விழா: சேதுபதி மேல்நிலைப்பள்ளி, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரியப் பள்ளிகள் தலைவர் சங்கரன், பங்கேற்பு: செயலாளார் பார்த்தசாரதி, உறுப்பினர் அமுதன், தலைமையாசிரியர் நாராயணன், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஓய்வுபெற்ற முதுநிலை மேலாளர் மோகன், மதியம் 2:45 மணி.

விளையாட்டு

தமிழக சப் ஜூனியர் - 13 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மின்டன் போட்டிகள்: குயின் மீரா சர்வதேச பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், ஏற்பாடு: பள்ளி பேட்மின்டன் அகாடமி, காலை 11:00 மணி.

கண்காட்சி

இந்திய பாரம்பரிய ஆடைகள் விற்பனை கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us