ADDED : பிப் 13, 2025 05:32 AM
கோயில்
மாசி மண்டல உற்ஸவம் கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:30 முதல் 10:59 மணிக்குள்.
தெப்பத் திருவிழா: ஏலவார் குழலி ஏடகநாதர் கோயில், திருவேடகம், காலை 10:30 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி, அபிஷேகம், தீபாராதனை, மதியம் 3:30 மணி, சுவாமியும் அம்மனும் மின் அலங்காரத்தில் வீதியுலா, மாலை 6:00 மணி.
பிரம்மஸ்தான கோயில் ஆண்டு விழாவை முன்னிட்டு மாதா அமிர்தானந்தமயியின்சத்சங்கம், பஜனை, தியானம், தரிசனம்: மாதா அமிர்தானந்தமயி மடம், பசுமலை, காலை 11:00 மணி.
மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருவாசகம் முற்றோதல்: கற்பக விநாயகர் கோவில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 8:30 மணி, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், ஹரிவராசனம், குபேர சாய்பாபாவிற்கு ஆரத்தி, கூட்டுப்பாராயணம், மாலை 6:30 மணி.
ஸித்தாச்ரம குரு பூஜை விழா: ஸித்தாச்ரமம், 4, மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, தலைமை: தலைவர் கீதாபாரதி, அருளுரை: ராமகிருஷ்ண மடம் அர்க்கபிரபானந்த மகராஜ், காலை 9:00 மணி, அன்னதானம், மதியம் 12:00 மணி.
குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
செபமாலை திருப்பலி: லுார்தன்னை சர்ச், கே.புதுார், மதுரை, தலைமை: பங்குத்தந்தை ஜார்ஜ், காலை 5:30 மணி, நவநாள் திருப்பலி, தலைமை: வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச் பங்குத்தந்தை அற்புதராஜ், மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - ராம உமாராணி தங்கமுத்து, திருவள்ளுவர் மன்றம், 9, பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
மாசி மாத பிறப்பை முன்னிட்டு பகவத் கீதை சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:30 மணி.
அகண்டநாமம், அன்னதானம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 8:00 மணி.
பள்ளி, கல்லுாரி
வீரமாமுனிவர் இதழியல் அறக்கட்டளை கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, முன்னிலை: முதல்வர் செலின் சகாய மேரி, சிறப்புரை: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் குருசாமி, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 9:00 மணி.
தேனுார், தச்சம்பத்து, கட்டப்புளி நகர்நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா:தேனுார்,தலைமை: செந்தமிழ்க் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் ஜெயமூர்த்தி, போதைப் பழக்க ஒழிப்பு சிறப்புரை: இன்ஸ்பெக்டர்காசி சேதுமணியன், சான்றிதழ் வழங்குபவர்: மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாண்டி, காலை 9:00 மணி.
'பைத்தான்' மொழியைப் பயன்படுத்தி இயந்திரக் கற்றலை உருவாக்குதல் குறித்து இரண்டு நாள் பயிற்சி: மதுரை சிவகாசி நாடார் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, பூவந்தி, தலைமை: முதல்வர் விசுமதி, செயலாளர் சிவராம், பயிற்சியளிப்பவர்கள்: பேராசிரியர்கள் பபிதா, கிருஷ்ணவேணி, காலை 10:00 மணி.
வேலைவாய்ப்பு முகாம்: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: லிங்குவா பிராங்கா பொது மேலாளர்பத்மாவதி, ஆங்கில மொழி பயிற்சியாளர் ஜோவிதா மெரிஸ் அர்ப்பனா, காலை 11:00 மணி.
உற்பத்தி வார விழாவை முன்னிட்டு பாலிடெக்னிக் மாணவர்களுக்கான திட்டப் போட்டிகள்: கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: கல்லுாரி தலைவர் கணேஷ், செயலாளர் ராதாகிருஷ்ணன், முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன், பிராண்ட் ஆட்டோமேஷன் நிறுவனர் பொன்குமார், ஸ்கைலாப்ஸ் நிறுவனர் சுந்தரேஸ்வரன், பள்ளி மாணவர்களுக்கான போஸ்டர் விளக்கப் போட்டி: மங்கையர்க்கரசி, தி லயன்ஸ் மெட்ரிக், ஸ்ரீ சாதனா மெட்ரிக், ஆனந்த் மெமோரியல் மெட்ரிக் பள்ளிகள், மதுரை, ஏற்பாடு: மதுரை உற்பத்தி கவுன்சில், காலை 10:00 முதல் 12:30 மணி வரை.
இந்திய அறிவமைப்பை ஊக்குவிப்பதில் ஆங்கில மொழி, இலக்கியங்களின் பங்கு - தேசிய கருத்தரங்கு: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் நடனகோபால், முன்னிலை: தலைவர் சீத்தாராமன், பொருளாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், முதல்வர் சுரேஷ், சிறப்பு விருந்தினர்: கடம்பவனம் எத்னிக் ரிசார்ட் நிர்வாக இயக்குநர் சித்ரா, ஏற்பாடு: ஆங்கிலத் துறை, காலை 10:00 மணி.
பொது
கிழக்குக் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: உதவிப் பொறியாளர் அலுவலகம், மேலுார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி.
இந்தியர்கள் மீது மனிதஉரிமை மீறலில் ஈடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: தென்னிந்திய தலைவர் மணவாளன், பொதுச்செயலாளர் சிங்கராசு, ஏற்பாடு: தென்னிந்திய நுகர்வோர் மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பு, காலை 10:30 மணி.
அமைச்சர் தியாகராஜன், வார்டு 22ல் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு உதவிகள் வழங்கல்: திரு.வி.க., மேல்நிலைப்பள்ளி, அருள்தாஸ்புரம், தத்தனேரி, மதுரை, காலை 10:00 மணி, வார்டு 56ல் புதிய சமுதாய கூடம் திறப்பு: கரிமேடு மார்க்கெட் அருகில், மதுரை, காலை 10:30 மணி.
மருத்துவம்
இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
விளையாட்டு
தீயணைப்புத் துறைக்கான மாநில விளையாட்டு போட்டிகள்: ஆயுதப்படை மைதானம், மதுரை, ஏற்பாடு: தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை, காலை 7:00 மணி.
கண்காட்சி
'ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ' - காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளின் விற்பனை, கண்காட்சி: விஜய் மஹால், 44, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.