ADDED : மே 06, 2025 06:19 AM
கோயில்
சித்திரை திருவிழா 8ம் நாள்: மீனாட்சி அம்மன் கோயில், பட்டாபிஷேகம், தங்கப்பல்லக்கில் கீழச் சித்திரை வீதி, தெற்காவணி மூல வீதி வழியாக உலா, திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதினம்கட்டுச்செட்டி மண்டபத்தில் எழுந்தருளல், காலை 10:00 மணி, புறப்பாடாகி சித்திரை வீதிகள் வழியாக கோயில் வருதல், மதியம் 3:00 மணி, அம்மனுக்கு அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் பட்டாபிஷேகம், இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள், அம்மன், சுவாமியும் வெள்ளி சிம்மாசனத்தில் மாசி வீதிகள் உலா, இரவு 9:00 மணி.
மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம்: ஸ்ரீ சக்தி சந்நியாசி சுவாமி கோயில், 28, புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
சித்திரை திருவிழா -துவக்கம்: அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயில், தென்கரை, சோழவந்தான், சுவாமி நந்தி வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா, மாலை 6:00 மணி.
சித்திரை திருவிழா 8ம் நாள்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், குலசேகரன்கோட்டை, வாடிப்பட்டி, செங்கோல், வைர கிரீடம், தங்க கவசம் புறப்பாடு, மதியம் 3:00 மணி, பட்டாபிஷேகம், மாலை 6:00 மணி.
பூக்குழி விழா 9ம் நாள்: திரவுபதி அம்மன் கோயில், சோழவந்தான், பால்குடம், காலை 9:00 மணி, துரியோதனன் உருவம் திறப்பு, மாலை 5:00 மணி, பூ வழங்குதல், இரவு 7:00 மணி, பூக்குழி கண் திறத்தல் இரவு 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு
திருவிளையாடல் புராணம்: நிகழ்த்துபவர் -- மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பொது
கோடைகால விளையாட்டுகள், கல்வியிடைப் பயிற்சி - கோயில் கலைக் கட்டடக்கலை: அரசு மியூசியம், மதுரை, ஏற்பாடு: அரசு மியூசியத்துறை, காலை 10:00 மணி.
ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.
குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் -- தோற்பாவைக் கூத்து: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பயிற்சியளிப்பவர் -- முத்து லட்சுமண ராவ் குழு, காலை 11:00 மணி.
கண்காட்சி
அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
சமத்துவம் காண்போம் - விழிப்புணர்வு, சமத்துவப் பார்வைகள் புகைப்படக் கண்காட்சி: அரசு மியூசியம், மதுரை, ஏற்பாடு: ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு, போலீஸ் துறை, சமத்துவ மையம், சென்னை சமூகப்பணிக் கல்லுாரி, காலை 10:00 மணி முதல்.
கல்விக் கண்காட்சி: பாத்திமா கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.