ADDED : ஆக 26, 2025 03:58 AM
கோயில்
ஆவணி மூலத்திருவிழா: மீனாட்சிஅம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரம், கருங்குருவிக்கு உபதேச லீலை அலங்காரம், காலை 9:00 மணி, ஆவணி மூலவீதிகளில் சுவாமி கற்பக விருட்சம், அம்மன் வெள்ளி சிம்மவாகனத்தில் உலா, இரவு 7:00 மணி.
சஞ்சீவி பாகவத சுவாமி ஜெயந்தி: ராமானந்த சுவாமிகள் நாம சங்கீர்த்தனம், 23.டி சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:00 மணி.
பள்ளி, கல்லுாரி
பள்ளி விளையாட்டு விழா: செயின்ட் மேரீஸ் பள்ளி, கீழவாசல், மதுரை, தலைமை: பள்ளி அதிபர் ஹென்றி ஜெரோம், பங்கேற்பு: இந்திய ஒலிம்பிக் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன், போலீஸ் உதவி கமிஷனர் சூரகுமாரன், காலை 8:00 மணி.
ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்: அரசு சட்டக்கல்லுாரி, மதுரை, தலைப்பு: புதிய குற்றவியல் சட்டங்களின் தொழில்நுட்ப நவீனமயமாக்கலை ஆராய்தல், பங்கேற்பு: உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி, கல்லுாரி முதல்வர் பி.குமரன், ஏற்பாடு: சட்டக்கல்வி இயக்ககம், சென்னை, அரசு சட்டக்கல்லுாரி, காலை 9:25 மணி.
பொது
முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, கல்லுாரி மாணவர்களுக்கான டென்னிஸ் போட்டிகள், பங்கேற்பு: மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட பள்ளி, கல்லுாரிகள், ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மதுரை மண்டலம், காலை 8:00 மணி.
பொது விவாத கூட்டம்: ஐடியாஸ் மையம், சிந்தாமணி ரோடு, வாழைத்தோப்பு, மதுரை, துாய்மைத் தொழிலாளர்கள் போராட்டமும், அரசியல் கட்சிகளின் கருத்துகளும் குறித்து உரையாடல், ஏற்பாடு: சகாய பிலோமின்ராஜ், நெறியாளர், மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு, மாலை 4:00 மணி.
மாணவர்களுக்கான படிப்பிடைப் பயிற்சி துவக்க விழா: ஐ.ஜி.எஸ்.ஆர்., அரங்கம், காந்தி மியூசியம், மதுரை, தலைமை: கே.ஆர்.நந்தாராவ், பங்கேற்பு: கல்வி அலுவலர் நடராஜன், பங்கேற்பு: அல்ட்ரா கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை 3ம் ஆண்டு மாணவர்கள், காலை 10:30 மணி.