/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறைதீர் கூட்டத்தில் போலீஸ் மீது வியாபாரிகள் புகார்
/
குறைதீர் கூட்டத்தில் போலீஸ் மீது வியாபாரிகள் புகார்
குறைதீர் கூட்டத்தில் போலீஸ் மீது வியாபாரிகள் புகார்
குறைதீர் கூட்டத்தில் போலீஸ் மீது வியாபாரிகள் புகார்
ADDED : ஜன 14, 2025 05:25 AM
மதுரை: மதுரையில் கலெக்டர் சங்கீதா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகரன் பங்கேற்றனர்.
சாலையோர, மார்க்கெட் விற்பனையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சந்தியாகு அளித்த மனு: பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 40 ஆண்டுகளாக வியாபாரம் நடத்தி வருகிறோம். 40 நாட்களாக வியாபாரம் செய்யவிடாமல் போலீசார் தடுக்கின்றனர். மாநகராட்சி வழங்கிய அடையாள அட்டை இருந்தபோதும் தடுக்கின்றனர்.
வறுமையில் வாடும் நாங்கள் வியாபாரம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவுபிறப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
யா. நரசிங்கம் பகுதியினர் இளைஞர் பெருமன்ற செயலாளர் கிருஷ்பாக்கியம் தலைமையில் மனு அளித்தனர். அதில், எங்கள் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுகிறோம். எங்கள் பகுதியை மாநகராட்சியோடு இணைத்தால் வருவாய் பாதிக்கும். மாநகராட்சியோடுஇணைக்க எந்த வசதியும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
அண்ணாநகர் வழக்கறிஞர் முத்துக்குமார் அளித்த மனு: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. அப்போது விழாக்குழுவினரால் அலைபேசி டவர்கள், மின்கம்பங்களில் விதிகளை மீறி அதிக ஒலித்திறனுள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. முதலுதவி மையம் அருகே கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அமைக்கப்படுவதால், பாதிப்பு ஏற்பட்டு, வீரர்களுக்கு அளிக்கும் சிகிச்சையில் தாமதம் ஏற்படுகிறது.
கால்நடை பராமரிப்புத் துறை முதன்மை செயலர் உத்தரவில், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி அருகே ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
அதை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.