/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுதவறுக்கும் பெரும் அபராதம் விதிப்பதாக வர்த்தகர்கள் வருத்தம்; சட்டம் அறியாமல் நடவடிக்கை எடுப்பதாக புகார்
/
சிறுதவறுக்கும் பெரும் அபராதம் விதிப்பதாக வர்த்தகர்கள் வருத்தம்; சட்டம் அறியாமல் நடவடிக்கை எடுப்பதாக புகார்
சிறுதவறுக்கும் பெரும் அபராதம் விதிப்பதாக வர்த்தகர்கள் வருத்தம்; சட்டம் அறியாமல் நடவடிக்கை எடுப்பதாக புகார்
சிறுதவறுக்கும் பெரும் அபராதம் விதிப்பதாக வர்த்தகர்கள் வருத்தம்; சட்டம் அறியாமல் நடவடிக்கை எடுப்பதாக புகார்
ADDED : பிப் 19, 2024 06:05 AM

மதுரை : மதுரையில் வணிகவரித்துறையினர் சிறிய தவறுகளுக்கும் அதிகளவில் அபராதம் விதிப்பதாக சிறுவியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் தாங்கள் தயாரிக்கும், விற்பனை செய்யும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்தி வருகின்றனர். இவற்றை அமல்படுத்தும் வணிகவரி அதிகாரிகள் வரிசெலுத்தாத வாகனங்களை பிடித்து வரி, அபராதம் விதிக்கின்றனர்.
இது சில சமயங்களில் அளவுக்கு மீறி செல்வதாக வர்த்தகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் பொருட்களுக்கான பில், ரசீதுகளை கேட்கின்றனர். அதில் ஏதாவது ஒரு எண்ணிலோ, எழுத்திலோ தவறு இருந்தாலும் ரூ.10 ஆயிரம், 20 ஆயிரம் என அபராதம் விதிப்பதாக புலம்புகின்றனர். சமீபத்தில் கீழமாசிவீதியில் சரக்குடன் வந்த ஒரு வாகனத்தின் பதிவு எண்ணில் ஒரு எண் தவறாக இருந்ததால் அதிகாரிகள் ரூ. 9 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளனர்.
உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி கூறியதாவது: முறைகேடு கண்டறியப்பட்டால் அபராதம் விதிப்பது தவறல்ல. ஆனால் சிறிய தவறுக்கும் பல ஆயிரம் அபராதமாக விதிக்கின்றனர். உணவுப் பொருட்களுக்கு பெரும்பாலும் 5 சதவீத வரியே உள்ளது. அற்றுக்கும் அதிகளவில் அபராதம் விதிக்கின்றனர். இரவு நேரங்களில் பிடிக்கும் வாகனங்களை பகலில் விசாரிக்காமல், வர்த்தகர்களை நள்ளிரவில் தொந்தரவு செய்கின்றனர். நான்கு மாவட்டங்களை கடந்து செல்லும் வாகனங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுத்தி விசாரணை நடத்துகின்றனர். அதேசமயம் பெரு நிறுவனங்களை கண்டு கொள்வதில்லை.
சட்டத்தை முழுமையாக அறியாமல் அபராதம் விதிப்பதும் உண்டு. உதாரணமாக ஜவ்வரிசி உட்பட சில பொருட்களுக்கு 5 சதவீத வரி உண்டு. ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் எனில் இ வே பில் தேவையில்லை. இதைப் பொருட்படுத்தாமல் கண்டபடி அபராதம் விதிக்கின்றனர். அடையாள அட்டை அணியாத அதிகாரிகள், அவர்களின் பெயர், போன் குறித்து கேட்டால் தருவதில்லை. இத்துறையின் அமைச்சரின் ஊரிலேயே இந்நிலை உள்ளது. இதனால் சிறு, குறு வியாபாரிகள் தொழிலை கைவிடும் அளவுக்கு நெருக்கடியை சந்திக்கின்றனர்'' என்றார்.

