நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அரசு மியூசியம் சார்பில் கொங்கர் புளியங்குளம் சமணர் மலைப்பகுதியில் மரபு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
பாத்திமா கல்லுாரி, அருளானந்தர் கல்லுாரி, மங்கையர்க்கரசி, அமெரிக்கன் கல்லுாரி, என்.எம்.ஆர்., கல்லுாரி, தேனி மேலப்பேட்டை நாடார் சரஸ்வதி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர். கொங்கர் புளியங்குளம் மலையின் வரலாறு, தமிழி எழுத்துகளின் தோற்றம், வளர்ச்சி, சமணச் சிற்பங்களின் உருவமைப்பு குறித்து காப்பாட்சியர் மருதுபாண்டியன் விளக்கினார். தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி, ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் சான்றிதழ் வழங்கினர். தொல்லியல் அலுவலர் ஆனந்தி ஏற்பாடுகளை செய்திருந்தார்.