/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மகன் இறந்த சோகம்: தாய் உயிரை பறித்தது
/
மகன் இறந்த சோகம்: தாய் உயிரை பறித்தது
ADDED : ஆக 13, 2025 06:35 AM

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் குமரவேல் 51. இவரது மனைவி திலகவதி.
இவர்களுக்கு மகன் ஆனந்த் 21, மகள் ஸ்ரீமதி 18, உள்ளனர். குமரவேல் அவனியாபுரம் பகுதியில் விசைத்தறிக் கூடத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றினார்.
அவர், நேற்றுமுன்தினம் இரவு திடீரென நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக மனைவி திலகவதியிடம் கூறினார்.
சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்து இறந்தார். அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உறுதி செய்தனர்.
குமரவேலின் உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலைப் பார்த்து கதறி அழுதார், தாய் கோவிந்தம்மாள் 71. மகனின் கையைப் பிடித்தவாறு தொடர்ந்து அழுது கொண்டே இருந்த அவரும் இறந்தார். மகன் இறப்பை தாங்க முடியாமல், தாயும் இறந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.