/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
/
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
ADDED : நவ 16, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
தாசில்தார் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகள், ஊராட்சிகள் என 244 வாக்குச்சாவடிகள் உள்ளன.
நவ.16,17 மற்றும் 23, 24ல் வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் திருத்தம் தொடர்பான முகாம் நடக்கிறது.
அதில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் துணை தாசில்தார் அல்காபுதீன் வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது குறித்து பயிற்சியளித்தார். ஆர்.ஐ., ராமர் நன்றி கூறினார்.