நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர்களுக்கான மாணவர் நோக்கு நிலை பயிற்சி முகாம் துவங்கியது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்க உரையாற்றினார். இளமை பருவ சிக்கல்கள் ஓர் பார்வை என்ற தலைப்பில் டாக்டர் கவிதா, அகநிலை நல்வாழ்வு என்ற தலைப்பில் உளவியல் நிபுணர் முகில் பேசினர். பேராசிரியர் ராஜசேகரன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் கலைவாணி, ஞானகுரு ஒருங்கிணைத்தனர்.