நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மாவட்டத்தில் 117 பட வரைவாளர், 162 பணிமேற்பார்வையாளர் என மொத்தம் 279 பேருக்கு இடையபட்டி காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்தது.
நிறைவு விழாவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் வழங்கினார். நகராட்சி நிர்வாக மண்டல கமிஷனர் முருகேசன், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன், முத்து, உதவிப்பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.