ADDED : ஏப் 18, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,: மதுரை வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை சார்பில் திருமங்கலம் விவசாயிகளுக்கு தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து கே.புளியங்குளத்தில் பயிற்சி அளித்தனர்.
மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். ஏற்பாடுகளை திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வி, துணை அலுவலர் பாஸ்கர்ராஜா, உதவி அலுவலர் அர்ஜூன் செய்தனர். கே.புளியங்குளம், கிண்ணிமங்கலம், ஆ.கொக்குளம், கரடிக்கல் விவசாயிகள் பங்கேற்றனர்.

