/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி
/
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி
மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி
ADDED : டிச 16, 2024 06:39 AM
திருமங்கலம், : திருமங்கலம் தாலுகா தங்கலாச்சேரி, அம்மாபட்டி பகுதிகளில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத்தாக்குதல் அதிகமாக இருப்பதால் வேளாண் உதவி இயக்குனர் மயில் தலைமையில், வேளாண் அலுவலர் நரேஷ் குமார், துணை அலுவலர் ரவிச்சந்திரன், மதுரை வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் சுரேஷ், முன்னோடி விவசாயிகள் இணைந்து வயல் ஆய்வு செய்தனர்.
புரட்டாசி, ஐப்பசி பட்டங்களில் பயிரிட்ட வயல்களில் படைப்புழு தாக்குதல் அதிக அளவில் காணப்பட்டது. வளர்ச்சி நிலையில் இருக்கும் பயிர்களுக்கு ஏக்கருக்கு 100 மி.லி., இமாம்மெக்டின் பென்சோயேட் அல்லது 100 மி.லி., ஸ்பைனிடோரம் ஏக்கருக்கு 5 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறி விளக்குப்பொறி 1 என்ற அளவில் பயன்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டது.
வரும் காலங்களில் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த விதைக்கும்முன் கோடை உழவு செய்தல், கடைசி உழவின்போது ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அடி உரமாக இடுதல், வரப்பு பயிராக பயறு வகை, தீவனப்புல், எள், சூரியகாந்தி, சாமந்தி போன்றவை மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
தொடர்ந்து மக்காச்சோளம் பயிரிடுவதை தவிர்த்து சுழற்சி முறையில் மாற்றுப் பயிராக பயிறு வகைகளை சாகுபடி செய்யலாம். மேலும் பின் பருவ சாகுபடியினை தவிர்க்க வேண்டும். மானாவாரி நிலங்களில் ஆடி, ஆவணி பட்டங்களில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்தால் படைப்புழு தாக்குதலை தவிர்ப்பதுடன் அதிக மகசூல் பெறலாம் என ஆலோசனை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப திட்ட மேலாளர் புஷ்பமாலா, உதவி அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தனர்.

