UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:06 PM
அ நிறம் | அளவு
மேலுார்: ஒத்தக்கடை துணைமின் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட டிரான்ஸ்பார்மர் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.
மின்வாரிய தலைமை பொறியாளர் பத்மாவதி தலைமை வகித்தார். மதுரை கிழக்கு செயற்பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
செயற்பொறியாளர் கூறியதாவது: ஒத்தக்கடை துணை மின்நிலையத்தில் 10 எம்.வி.ஏ., திறனுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டது. மின் நுகர்வோர் தேவை, பயன்பாடு அதிகரிக்கவே இந்த டிரான்ஸ்பார்மர் ரூ.3.44 கோடி செலவில் 16 எம்.வி.ஏ., வாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த 34 ஆயிரத்து 103 மின்நுகர்வோருக்கு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கமுடியும் என்றார்.
