ADDED : ஜூன் 30, 2025 03:04 AM
மதுரை : சர்வதேச வெப்ப மண்டல தினத்தையொட்டி யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஒத்தக்கடை அரசு பூங்காவில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். பவுண்டேஷன் ஆலோசகர் ராகேனுஷ் முன்னிலை வகித்தார். ஆலோசகர் ஸ்டெல்லாமேரி வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார்.
தலைமை ஆசிரியர் பேசுகையில், ''உலகின் மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதம் காடுகள். தோராயமாக உலகில் 80 சதவீதம் பல்லுயிர் தன்மையும், கலாசாரம், மொழி ஆகியவற்றில் பல்லுயிர் தன்மையும், வெப்ப மண்டல காடுகள் கொண்டுள்ளன'' என்றார். இந்நிகழ்ச்சியில் நிலவேம்பு, கடம்பம், புங்கை, நீர்மருது, மகிழம் மரக்கன்றுகள் நடப்பட்டன. குடியிருப்பு பொறுப்பாளர்கள் கன்றுகளை பாதுகாக்க வலைகள் வழங்கினர். நிர்வாகிகள் ஜெயபாலன், வெண்பா, அரியநட்சத்திரா, கபிலன் உட்பட பலர் பங்கேற்றனர்.