ADDED : செப் 04, 2025 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சத்குரு பிறந்த நாளையொட்டி காவேரி கூக்குரல் சார்பில் திருமங்கலம் பி.புதுப்பட்டியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
ஈஷா தன்னார்வலர்கள் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டனர். மதுரையில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணையில் விவசாயிகளுக்குத் தேவையான டிம்பர் வகை மரக்கன்றுகள் ரூ.5க்கும், பிற மரக்கன்றுகள் ரூ.10க்கும் வழங்கப்படுகிறது. ஜாதிக்காய், அவகோடா, சர்வசுகந்தி, லவங்கம், மிளகுக் கன்றுகள் இருப்பு உள்ளன.

