ADDED : டிச 21, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நாயக்கர்பட்டி, அரிட்டாபட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபயணம் நடந்தது.
கீழ்வேளூர் எம்.எல்.ஏ., நாகைமாலி, மதுரை துணை மேயர் நாகராஜன், மாநில செயலாளர் சிங்காரவேலன், சினிமா இயக்குனர் கவுதம் ராஜா துவக்கி வைத்தனர். எதிர்ப்பு குழு நிர்வாகிகள் சுந்தரேசன், செல்வராஜ், கருப்பணன், ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேற்று அரிட்டாபட்டி முதல் அழகர் கோவில் வரை சென்றனர். இன்று (டிச.21) கிடாரிப்பட்டி முதல் நரசிங்கம்பட்டி, நாளை தெற்கு தெரு முதல் மேலுார் வரை செல்கின்றனர்.