/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
‛பழனிசாமியை விரும்பும் த.வெ.க.,தொண்டர்கள்' கூட்டணிக்கு அச்சாரமிடுகிறார் செல்லுார் ராஜூ
/
‛பழனிசாமியை விரும்பும் த.வெ.க.,தொண்டர்கள்' கூட்டணிக்கு அச்சாரமிடுகிறார் செல்லுார் ராஜூ
‛பழனிசாமியை விரும்பும் த.வெ.க.,தொண்டர்கள்' கூட்டணிக்கு அச்சாரமிடுகிறார் செல்லுார் ராஜூ
‛பழனிசாமியை விரும்பும் த.வெ.க.,தொண்டர்கள்' கூட்டணிக்கு அச்சாரமிடுகிறார் செல்லுார் ராஜூ
ADDED : அக் 12, 2025 05:12 AM
மதுரை : ''அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியை தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதனால் அவரது கூட்டங்களில் தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள்,'' என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார்.
அவர் கூறியதாவது: பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க., கொடியை அக்கட்சியினர் காட்டுகிறார்கள். விஜய்க்காக குரல் கொடுத்தவர் பழனிசாமி. 'எந்த அரசியல் தலைவர்களும் எங்களுக்காக குரல் கொடுக்கவில்லை. எங்களுக்காக குரல் கொடுத்து எங்கள் சூழ்நிலையை எடுத்துச் சொன்னவர் பழனிசாமி. எனவே அவர் வந்ததால் நாங்களாக வந்து கொடியை காட்டினோம்,' என த.வெ.க., தொண்டர்கள் கூறினார்கள். பழனிசாமியை அக்கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்கள். தன்னெழுச்சியாக கட்சி கொடியை காட்டுகிறார்கள்.
தனக்கு ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள்.
அதுபோல தான் விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் அ.தி.மு.க., குறித்து தினகரன் விமர்சிக்கிறார்.
தரம் தாழ்ந்து போகக்கூடிய கட்சி அ.தி.மு.க., கிடையாது. அ.தி.மு.க., தொண்டர்கள் அடுத்த கட்சியின் கொடியை துாக்கியதாக வரலாறு உள்ளதா. கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம். தோளில் துாக்கி கொண்டாடுவோம்.
எதிர்த்தால் துாக்கிப் போட்டு மிதித்து விடுவோம்.
இது அ.தி.மு.க., தொண்டனின் வரலாறு. எங்கள் தலைவர்கள் சாமி என்றால் சாமி, சாணி என்றால் சாணி. எங்கள் பொதுச் செயலாளர் யாரை 'சாமி' என்று சொன்னால் அவரை கும்பிடுவோம்.
வி.சி.க., வன்முறை இயக்கத்துடன் சேர்ந்து விட்டது.
விஜய் கட்சிக்கு கட்டுக்கோப்பு வேண்டும் என்று திருமாவளவன் சொல்கிறார்.
முதலில் தன் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை அவர் கண்டிக்க வேண்டும். அவர் சேர்ந்த இடம் அப்படி. தி.மு.க., எப்படியோ அப்படித்தான் வி.சி.க.,வும் இருப்பார்கள்.
எம்.ஜி.ஆர்., என்றால் ஒரு கெத்து. அவருக்கு இணை யாரும் கிடையாது. எம்.ஜி.ஆரோடு எவரையும், எந்த தலைவரையும் ஒப்பிட மாட்டோம் என்றார்.