ADDED : மார் 15, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா பெரிய வாகைகுளத்தில் விநாயகர் கோயில் உள்ளது. சின்ன வாகைகுளத்தை சேர்ந்த மக்களுக்கும் இது பொதுவானது. இரண்டு கிராமத்திற்கும் பாத்தியப்பட்ட கண்மாய் மீன் ஏலம், புளியமரம் குத்தகை, வரி வசூல் பணத்தை கோயில் மரப்பெட்டியில் வைத்து இருப்பர்.
இதை மர்மநபர்கள் கிராமத்திற்கு வெளியே எடுத்துச்சென்று ரூ.10.42 லட்சத்தை திருடினர். மீண்டும் பெட்டியை வைக்க வந்த போது பிடிபட்டனர். அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் 33, டாங்கேயன் 37, எனத் தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.7.92 லட்சத்தை மீட்டனர். அதை ஊரைச் சேர்ந்த ஜெயம், பாண்டியை தேடி வருகின்றனர்.

