/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர் ரகுபதிக்கு உதயகுமார் கண்டனம்
/
அமைச்சர் ரகுபதிக்கு உதயகுமார் கண்டனம்
ADDED : டிச 17, 2024 04:15 AM
மதுரை: ''முகவரி மற்றும் அடையாளம் கொடுத்த அ.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்த அமைச்சர் ரகுபதிக்கு எங்களை பற்றியோ, பழனிசாமி பற்றியோ பேச அருகதை கிடையாது'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அவர் கூறியதாவது: டிச.,9ல் சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கம் குறித்து ஏல அறிவிப்பு வெளியான 2024 பிப்ரவரி மாதம் முதல், 'ஹிந்துஸ்தான் ஜிங்க் லிட்.,' என்ற தனியார் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்க ஏல உரிமை இறுதி செய்யப்பட்டதாக மத்திய சுரங்க அமைச்சகம் நவ., 7 அன்று வெளியிட்ட இறுதி அறிக்கை வரை, 10 மாதங்கள் தி.மு.க., அரசு எதிர்ப்பை காட்டாததற்கு காரணம் என்ன என்று பொதுச் செயலாளர் பழனிசாமி கேட்டார்.
நேரடியாகக் கேட்ட கேள்விக்கு உரிய பதில் அளிக்காமல் முதல்வரும், அமைச்சர்களும் திக்கி திணறியதை நாடே பார்த்தது.
வேட்டியை மாற்றிக் கட்டி, தி.மு.க.,-விற்கு மாறிய அமைச்சர் ரகுபதி பொதுச் செயலாளர் குறித்து பேச அருகதை கிடையாது.
அ.தி.மு.க.,வில் இருந்தபோது தொண்டர்கள் உழைப்பால் எம்.எல்.ஏ.,வான அவர், ஜெயலலிதா கருணையால் அமைச்சரானார். பதவியும், அதிகாரமும் வேண்டுமென்று அடிமையாக தி.மு.க.,வில் போய் சேர்ந்துகொண்டார்.
முகவரி மற்றும் அடையாளம் கொடுத்த அ.தி.மு.க.,வுக்கு துரோகம் இழைத்த ரகுபதிக்கு எங்களை பற்றியோ, பழனிசாமி பற்றியோ பேச அருகதை கிடையாது. இனியாவது சிறுபிள்ளைத் தனமாக பிதற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.