/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உதயகுமார் தாயார் மறைவு: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
/
உதயகுமார் தாயார் மறைவு: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
உதயகுமார் தாயார் மறைவு: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
உதயகுமார் தாயார் மறைவு: முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி
ADDED : செப் 09, 2025 04:24 AM
மதுரை: தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாார் தாயார் பி.மீனாள் அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
உதயகுமாரின் தாயார் மீனாள் அம்மாள் உடல்நலக்குறைவால் மறைந்ததும், அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக டி.குன்னத்துாரில் உள்ள அம்மா கோயிலில் வைக்கப்பட்டது.உதயகுமாருக்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லுார் ராஜூ ஆறுதல் தெரிவித்தனர்.
அ.தி.மு.க., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, காமராஜ், டாக்டர் விஜயபாஸ்கர், வைகைச் செல்வன், ராஜலட்சுமி, முன்னாள் அரசு கொறடா தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா, முருகோடை ராமர், எஸ்.கே.டி.ஜக்கையன், செந்தில்நாதன், முனியசாமி, கணேசராஜா, எம்.எல்.ஏ.,க்கள் பெரியபுள்ளான், பூமிநாதன்.
திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், தமிழரசன், டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவணன், நீதிபதி, தவசி, சிவசாமி, கருப்பையா, மாணிக்கம், ராஜவர்மன், சதன் பிரபாகரன், முத்தையா, பா.ஜ.,மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், உசிலம்பட்டி முருகன்ஜி, தேவேந்திரகுல வேளாண் கூட்டமைப்பு தலைவர் சந்தனபிரியா, வேலம்மாள் கல்வி குடும்பத் தலைவர் முத்துராமலிங்கம், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் பங்கேற்றனர்.
இதையடுத்து அங்கிருந்து இறுதி ஊர்வலம் துவங்கி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.