/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயோ மெட்ரிக் வருகை பதிவு; பல்கலைகளுக்கு உத்தரவு
/
பயோ மெட்ரிக் வருகை பதிவு; பல்கலைகளுக்கு உத்தரவு
ADDED : நவ 20, 2024 06:50 AM
மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைகளிலும் உடனடியாக பயோ மெட்ரிக் வருகை பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைகளில் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் தாமதமாக வருகை தருவதும், எவ்வித அனுமதியும் பெறாமல் முன்கூட்டியே வீடுகளுக்கு சென்று விடுவதாகவும் பரவலாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளால் பல்கலைகள் வளாகத்தில் பல்வேறு விரும்பத்தகாத செயல்பாடுகள் அரங்கேறுகின்றன.
வெளிநபர்கள் தாராளமாக வளாகத்திற்குள் வந்துசெல்கின்றனர். இதுபோன்ற கட்டுப்பாடு இல்லாத காரணங்களால் மாணவர்கள் போராட்டம், ஆசிரியர் - மாணவர்களிடையே சுமூக உறவு பாதிப்பு போன்ற பிரச்னைகள் எழுகின்றன. மாணவர்கள் பலன் பாதிக்கிறது. இதை தவிர்க்க பல்கலைகளில் உடன் பயோ மெட்ரிக் வருகை பதிவை நடைமுறைப்படுத்தவேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

