/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பராமரிப்பற்ற பாலமேடு பேரூராட்சி அலுவலகம்
/
பராமரிப்பற்ற பாலமேடு பேரூராட்சி அலுவலகம்
ADDED : நவ 28, 2024 05:44 AM

பாலமேடு: பாலமேடு பேரூராட்சி அலுவலக கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது.
இந்த அலுவலக கட்டடம் 2003ல் ரூ.7.20 லட்சத்தில் கட்டப்பட்டது. கட்டடத்தின் முன் பகுதியில் மேற்குபுறம் சிலாப்பின் சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழ துவங்கியுள்ளன. கட்டடம் விழும் அபாய நிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு பணிபுரிவோர், பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் மீது சிமென்ட் கற்கள் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.
பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வாகன நிறுத்த கட்டுமான பணிகள் நடந்தன. அப்போதும் அதிகாரிகள் அலுவலக கட்டடத்தை பராமரிக்க தவறிவிட்டனர். அலுவலக கட்டடத்தை உடனே பராமரிக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.