ADDED : ஆக 16, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்; சோழவந்தான் அருகே காடுபட்டி சென்னாக்கல் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் காடுபட்டி - விக்கிரமங்கலம் ரோட்டில் சென்னாக்கல் பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றிலும் வலையால் வேலி அமைக்கப்பட்டது.
கன்றுகளை நட்டதோடு விட்டுவிட்டனர். தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் பாதி மரக்கன்றுகள் கருகி அழிந்துவிட்டன. சமூக விரோதிகள், கால்நடைகளால் வேலிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பிற ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் பராமரிக்காத நிலை உள்ளது. மீதமுள்ள மரக்கன்றுகளையாவது முறையாக பராமரித்து காப்பாற்ற வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

