UPDATED : நவ 07, 2026 04:38 PM
ADDED : நவ 07, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை புதுார் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் விபத்து, மாசில்லா தீபாவளி விழிப்புணர்வு ஒத்திகை நடந்தது.
தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை வகித்தார். தல்லாகுலம் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன், சிறப்பு நிலைய அலுவலர் முகமது சலீம்,தீயணைப்பு துறை அலுவலர்கள் மார்த்தாண்டன், ராஜபூபதி, முருகானந்தன், நிஷாந்தன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பாதுகாப்பாக பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது என செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தலைமையாசிரியர் முகமது ரபி, அல்ஹாஜ் முகமது ஏற்பாடு செய்தனர்.
