/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர் சாகுபடி வயல்களில் '‛டிஜிட்டல் சர்வே' ஒரு லட்சம் உட்பிரிவு எண்கள் பதிவேற்றம்

ADDED : நவ 10, 2024 04:16 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை பதிவு செய்யும் 'டிஜிட்டல் சர்வே' பணியில் 2 நாட்களில் ஒரு லட்சத்து 6073 சர்வே உட்பிரிவு எண்கள் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
மானியம், நிவாரணம், ஊக்கத்தொகை உட்பட மத்திய அரசின் பல்வேறு சலுகைகளை பெறும் விவசாயிகளின் வயல்களில் உண்மையாகவே பயிர்கள் சாகுபடி ஆகியுள்ளனவா என்பதை கண்டறிந்து எவ்வளவு ஏக்கர் வரை உள்ளதென பதிவேற்றம் செய்வதே 'டிஜிட்டல் கிராப் சர்வே' முறை. நவ. 6ல் தமிழக அளவில் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது.
மதுரையில் முதல்நாளில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு, தனியார் விவசாய கல்லுாரி மாணவர்கள் சர்வே பணியில் ஈடுபட்டனர். இதற்கென உள்ள அடங்கல் எனப்படும் செயலியில் விவசாயிகளின் நிலத்தில் உள்ள பயிர்களையும் அதற்கான சர்வே உட்பிரிவு எண்ணையும் பதிவு செய்து வருகின்றனர்.
வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறிய தாவது: மதுரை விவசாய கல்லுாரி, உசிலம்பட்டி கிருஷ்ணா விவசாய கல்லுாரி, தேனி குள்ளப்புரம் விவசாய மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் 1280 பேரும் வேளாண், தோட்டக்கலை துறை பணியாளர்கள் 230 பேரும் சர்வே பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் 13 வட்டாரங்களில் உள்ள 44 கிராமங்களில் நேற்று சர்வே பணி நடந்தது. 2 நாட்களில் ஒரு லட்சத்து 6073 சர்வே உட்பிரிவு எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நவ. 22 வரை பணிகள் நடைபெறும் என்றார்.