/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பூங்கா சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
/
பூங்கா சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பூங்கா சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
பூங்கா சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 28, 2025 06:13 AM
திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்றத் தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது.
பொருளாளர் அண்ணாமலை, துணைத் தலைவர் காளிதாசன், செயற்குழு உறுப்பினர் வேட்டையார் முன்னிலை வகித்தனர். இளைஞரணி அரவிந்தன் வரவேற்றார். நிர்வாகிகள் குலசேகரன், குப்புசாமி, ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். பஹல்காமில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆன்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல லட்சம் செலவில் ஹார்விபட்டி பூங்கா சீரமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது.
இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் நிறைவடையவில்லை. பூங்கா இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது.
பராமரிப்பு பணியை விரைவுபடுத்தவும், ஹார்விபட்டி நுழைவு வாயிலில் இருந்து நிலையூர் பிரிவு வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தவும் மாநகராட்சியை கேட்டுக் கொள்வது, அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. சங்கரய்யா நன்றி கூறினார்.

