/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய வாகைகுளம் கண்மாய்
/
குப்பை கொட்டும் இடமாக மாறிய வாகைகுளம் கண்மாய்
ADDED : பிப் 07, 2024 07:15 AM

மதுரை : மதுரை மேற்கு ஒன்றியம் பேச்சிக்குளம் ஊராட்சி வாகைகுளம் கண்மாய் குப்பை கொட்டும் இடமாக மாறி வருகிறது.
இக்கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் முட்புதர் மண்டி கிடக்கிறது. இதை பயன்படுத்தி பல இடங்களில் சேகரிக்கப்பட்ட குப்பையை இங்கு கொட்டி வருகின்றனர். இப்பகுதிக்கு நீர் ஆதாரமான வாகைகுளம் கண்மாய் தடம் தெரியாமல் போய்விடும் என மக்கள் அச்சப்படுகின்றனர்.
சமூக ஆர்வலர் செல்வராஜ்: குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் குப்பையை கொட்டி செல்கின்றனர். நாய்கள், மாடுகள் என கால்நடைகள் தொல்லை தருகின்றன. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல குழந்தைகளுக்கு காய்ச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகைகுளம் கண்மாயை ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து கலெக்டரிடமும் மனு கொடுத்துள்ளோம் என்றார்.

