/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர்
/
குன்றத்து கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர்
ADDED : நவ 26, 2024 05:32 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பானாங்குளம், சேமட்டான்குளம், செவ்வந்திகுளம், குறுக்கட்டான், தென்கால், நிலையூர் பெரிய கண்மாய்கள் தண்ணீர்மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் இக்கண்மாய்கள் நிரம்பும்.
தற்போது இக்கண்மாய்களில் 30 முதல் 40 சதவீத அளவுக்கு மழைநீர் உள்ளது. சமீபத்தில் பெய்து வரும் மழை, கிணறுகள் ஆழ்குழாய்களில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மட்டுமே நெல் நடவு செய்துள்ளனர்.
கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள விவசாயிகள் பணிகளை இன்னும் துவக்க வில்லை.
சில தினங்களாக குன்றத்து கண்மாய்களுக்கு நிலையூர் கால்வாய்கள் வழியாக வைகை அணை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை விவசாய பணிகளை துவக்காதோர் சில தினங்களில் நெல் நாற்றங்கால் அமைக்க தயாராகி வருகின்றனர். செவ்வந்தி குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.