ADDED : ஆக 24, 2025 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: காஞ்சிபுரம் உத்திரமேரூரை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர்.
மலை மீதுள்ள ராக்காயி அம்மன், சோலைமலை முருகனை தரிசித்த பின் மாலையில் கீழே இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த வேன், அடிவாரம் அருகே கவிழ்ந்தது. 6 பேர் காயமடைந்தனர். கிரேன் உதவியுடன் வேன் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில் மலையில் இருந்து இறங்கும்போது ஓட்டுநர் பிரேக் பிடித்ததில் வேன் கவிழ்ந்தது தெரிந்தது.