தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரிச்சியூர் செல்வம் கைது

 வரிச்சியூர் செல்வம் கைது

 வரிச்சியூர் செல்வம் கைது


ADDED : மார் 10, 2026 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலூர்: மேலூர் சுவாமிநாதன் 54. இவர் 2025-ல் தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு பதிவு செய்து கொடுத்து ரூ. 45 லட்சத்தை கடனாக பெற்றார். ராதாகிருஷ்ணன் தாமரைப்பட்டி விஜயகுமாருக்கு அதை பதிவு செய்தார். அதனால் சுவாமிநாதன் பெருமாள்பட்டி அன்புநாதனை தொடர்பு கொண்டு இடத்தை மீட்டுத் தருமாறு கூறினார். அன்புநாதன் வரிச்சியூர் செல்வத்தை அவரிடம் அறிமுகப்படுத்தினார்.

வரிச்சியூர் செல்வம் இடத்தை மீட்டு தருவதாக கூறி சுவாமிநாதனிடம் ரூ. 67 லட்சத்தை வாங்கிக்கொண்டு இடத்தை மீட்டு தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. மேலும் சாமிநாதனுக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். அவர் புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரித்து வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us