ADDED : ஆக 25, 2025 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர், : ஆவணி மாதம் முகூர்த்தம் என்பதால் காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
பேரையூர் பகுதியில் கத்தரி, தக்காளி, வெண்டை செடி அவரை உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் உள்ளூர் மார்க்கெட் போக மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த ஆடி மாதம் காய்கறிகள் விலை குறைந்திருந்தது. தற்போது ஆவணி பிறந்தபின், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, காதணி விழா, கிரகபிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கிறது. இதனால் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ கத்திரி ரூ.20க்கு விற்றது. தற்போது ரூ. 50 ஆகவும், ரூ.20க்கு விற்ற வெண்டை ரூ.40 ஆகவும், ரூ.25 க்கு விற்ற தக்காளி ரூ.50 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.