/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்
/
பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்
பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்
பண்டிகைகளில் காய்கறி விற்பனை; உழவர் சந்தைகளில் அமோகம்
ADDED : அக் 29, 2025 07:40 AM
மதுரை: மதுரை மாவட்ட உழவர் சந்தைகளில் அக்டோபரில் தொடங்கிய பண்டிகைகளையொட்டி நேற்று (அக். 28) வரை ரூ.15.73 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளன.
வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது: அண்ணாநகர், சொக்கி குளம், பழங்காநத்தம், ஆனையூர், மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி உழவர் சந்தைகளில் தினமும் அதிகாலை 5:00 மணி முதல், விவசாயிகள் காய்கறி, பழங்களை கொண்டு வந்து விற்கின்றனர். சனி, ஞாயிறுகளில் வார நாட்களை விட 3 மடங்கு அளவிற்கு விற்பனையாகும்.
ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி தொடங்கி தீபாவளி, கந்த சஷ்டி என இம்மாதம் முழுவதும் காய்கறிகளின் விற்பனை அமோகமாக உள்ளது. அக்.1 முதல் நேற்று (அக்.28) வரை 2743 டன் காய்கறிகள், 290 டன் பழங்கள் கொண்டு வரப்பட்டு ரூ.15 கோடியே 73 லட்சத்து 17 ஆயிரத்து 50க்கு விற்பனையானது. நான்கு லட்சத்து 76 ஆயிரம் நுகர்வோர் சந்தையால் பயன்பெற்றனர்.
உழவர் சந்தைகளில் இடைத்தரகர் இன்றி விவசாயிகள் நேரடியாக விற்பதால் விலையும் எடையும் சரியாக உள்ளது என்றார்.

