/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தி.மு.க., எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை 'அட்வைஸ்'
/
தி.மு.க., எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை 'அட்வைஸ்'
தி.மு.க., எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை 'அட்வைஸ்'
தி.மு.க., எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும்: தமிழிசை 'அட்வைஸ்'
ADDED : செப் 22, 2025 03:12 AM
அவனியாபுரம் : 'தி.மு.க., எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்தி, தி.மு.க.,வை அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: பா.ஜ., -- அ.தி.மு.க., கூட்டணி பலமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.நீ.ம., கொங்கு கட்சி, ஜவஹிருல்லா கட்சிக்கு அங்கீகாரம் இல்லை. அவர்களைப் பார்த்து நாங்கள் பயப்படுவதாக சொன்னார்கள். இன்று அவர்கள் கூட்டணிதான் வெடவெடத்து போய் உள்ளது. தேர்தல் வர வர தே.ஜ., கூட்டணி வலுப்பெறும். தி.மு.க., கூட்டணி உதிரும்.
த.வெ.க., தலைவர் விஜய்க்கு மீனவர்களை பற்றி தவறாக எழுதிக் கொடுப்பதை பேசுகிறார். பிரதமராக மோடி வந்த பின்பு 3700 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். துாக்குத் தண்டனையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, விஜய் தனது வசன கர்த்தாவை மாற்ற வேண்டும்.
விஜய் திடீரென்று அரசியலுக்கு வந்ததால் என்னவென்று புரியாமல் பேசி வருகிறார். அவருக்கு கூட்டம் கூடுவதாக கூறுகின்றனர். அவரை பார்க்கத்தான் வருகின்றனரே தவிர, அவருக்கு ஓட்டளிக்க வரவில்லை. தி.மு.க., எதிர்ப்பை விஜய் தீவிரப்படுத்த வேண்டும். தி.மு.க.,வை நிச்சயம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
பிரதமர் முஸ்லிம்களை பாதுகாக்கவில்லை என்று விஜய் சொன்னார். முஸ்லிம் பெண்கள் முத்தலாக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் முஸ்லிம் பெண்கள் ஓட்டளிப்பதால்தான் நாங்கள் வெற்றி பெறுகிறோம்.
திருமாவளவன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை பார்ப்பார்கள். ஆனால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தால் குறை கூறுகின்றனர். கூட்டணி என இருந்தால் கட்சித் தலைவர்கள் பேசத்தானே செய்வர் என்றார்.