ADDED : ஆக 26, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தானில் தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். துணை செயலாளர் பொன்யாழினி முன்னிலை வகித்தார்.
நகர் செயலாளர் கிருஷ்ணன் ஏற்பாடுகளைச் செய்தார். நிர்வாகிகள் தெய்வேந்திரன், கண்ணம்மா, கோபால், மனோகரன் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி: தொகுதிப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் விழா நடந்தது. திருமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடத்தி, இனிப்பு வழங்கி கொண்டாடினர். தே.மு.தி.க., ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலுார்: வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, நகர் செயலாளர் சரவணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் முத்துவேல், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் சந்தன பீர் ஒளியுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.