/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சீனபொம்மைகள் வருகையால் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பாதிப்பு கவலையில் விளாச்சேரி தயாரிப்பாளர்கள்

ADDED : டிச 09, 2024 05:28 AM
திருநகர்: 'சீன கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் வருகையால் விளாச்சேரியில் தயாராகும் பொம்மைகளின் விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டு விட்டது' என தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மதுரை விளாச்சேரியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சீசனுக்கு ஏற்ப களிமண், சிமென்ட், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் சுவாமி சிலைகள், பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், 10 அடி உயர களிமண் விநாயகர் சிலைகள் என தயாரிக்கின்றனர்.
இங்கு தயாரிக்கும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. தற்போது சீசனுக்கு ஏற்ப 3 இஞ்ச் முதல் 2 அடி உயரம் வரையான கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் தயாரிக்கப்படுகிறது.
பொம்மை தயாரிப்பாளர்கள் கூறுகையில், ''சீனாவில் பைபரால் தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் குடில் பொம்மைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துவிட்டது. அதனால் இங்கு தயாரிக்கும் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள் விற்பனை பாதித்துள்ளது.
கடந்தாண்டு கிடைத்த ஆர்டர்களில் மூன்றில் ஒரு பங்கு கூட இந்தாண்டு கிடைக்கவில்லை. நேரடி விற்பனையும் குறைந்துவிட்டது.
கடந்தாண்டு சீன பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சீன தொழில்நுட்பத்தில் பொம்மைகள் தயாரிக்க அதிக முதலீடு தேவை. தொழிற்சாலைகள் மூலமே அவ்வாறு தயாரிக்க முடியும். நாங்கள் குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக பாரம்பரியமாக பொம்மை தயாரிப்பை மேற்கொண்டுள்ளோம்.
இதில் அதிகமானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். சீன பொம்மை வருகையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அவற்றுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்றனர்.