/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து; லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
/
கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து; லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து; லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
கிராம உதவியாளருக்கு ரூ.67.25 கோடி சொத்து; லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
ADDED : டிச 11, 2025 05:33 AM
மதுரை: மதுரையில், கிராம உதவியாளரான தலையாரி, தன் வருமானத்தை மீறி, 67.25 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மதுரை மாவட்ட செக்கானுாரணியை சேர்ந்தவர் பாண்டி, 58; திருமங்கலம் தாலுகா, கே.புளியங்குளம் கிராம உதவியாளர்.
இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆவணங்களின் அடிப்படையில், 67.25 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததை உறுதிசெய்து வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை, திருமங்கலம் தாலுகா, ஏ.கொக்குளத்தில், 2018 முதல் 2023 மார்ச் வரை, கிராம உதவியாளராக பாண்டி பணிபுரிந்தார். அப்போது, மாதச்சம்பளத்தை தாண்டி தன் பெயரிலும், மனைவி ராணி, மகன்கள் பெயர்களிலும் சொத்து சேர்த்து உள்ளார்.
இவரது மூத்த மகன் பிரபாகர், தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி மாளவிகா. உடல்நலக்குறைவால் பிரபாகர் இறந்ததை தொடர்ந்து, இரண்டாவது மகன் பிரகாஷிற்கு மாளவிகாவை திருமணம் செய்து வைத்தார்.
குடும்ப பிரச்னையில் மாளவிகா தற்கொலை செய்து கொண்டார். பிரகாஷும் கடந்தாண்டு ஜூன் 23ல் இறந்தார். இரு மகன்களின் பெயரிலும் சொத்துகள் இருக்கின்றன.
இதன் அடிப்படையில், வருமானத்திற்கு மீறி, 67 கோடியே 25 லட்சத்து 634 ரூபாய் மதிப்புள்ள சொத்தை பாண்டி சேர்த்துள்ளார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் கூறுகையில், 'இச்சொத்துகள் பெரும்பாலானவை மனைவி தரப்பில் இருந்து தரப்பட்டதாக பாண்டி கூறுகிறார். சொத்துகள் கைமாறி போகாமல் இருக்கவே மாளவிகாவை இளைய மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.

