/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனவர்களுக்காக குரல் காங்., எம்.பி., உறுதி
/
மீனவர்களுக்காக குரல் காங்., எம்.பி., உறுதி
ADDED : செப் 24, 2024 05:05 AM
அவனியாபுரம்: மதுரையில் விருதுநகர் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியதாவது: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இலங்கையில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மீனவர்கள்மீது கொடுமை நடக்கிறது.
புதிய அதிபர் பொறுப்பேற்ற நிலையில் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கடற்படையின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்கக்கூடிய அதிகாரங்களை இந்திய கடற்படையினருக்கு வழங்க வேண்டும்.
இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.
குளிர்கால கூட்டத் தொடரில் இது குறித்து தமிழக எம்.பி., க்கள் குரல் எழுப்புவோம் என்றார்.